குரு பெயர்ச்சி (2017 - 2018) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

Mar 09, 2018 to Jul 10, 2018 கலவையான பலன்கள்(45 / 100)


குரு பகவான் வக்கிர கதி அடைவதாலும் கண்டக சனியாலும் உங்களுக்கு சில பினடைவுகள் இந்த குரு பெயர்ச்சி காலத்தின் மூன்றாம் பாகத்தில் நடக்க உள்ளது. சனி பகவான் உங்களது ராசியில் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மார்ச் 09, 2018 முதல் 6 வாரங்களுக்கு சியி பிரச்சனைகளை தர உள்ளார். அதனால் நீங்கள் உங்களது உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். வயிறு மற்றும் பித்தபையில் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் உங்களது மன அழுத்தம் அதிகரிக்கலாம். நீங்கள் ஹனுமன் சளிசாவை தினமும் கேட்டு வருவது தேவையற்ற பயத்தையும் பதற்றத்தையும் குறைக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் உங்களது கணவன் / மனைவி மற்றும் தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் அவரிடத்தில் புதிதாக அறிமுகமனவரால் சில சிறு சிறு பிரச்சனைகள் எழ கூடும். உங்களுக்கும் நீங்கள் விரும்புபவருக்கும் இடையில் யாரும் வருவது உங்களுக்கு பிடிக்காது. அதனால் நீங்கள் அவர் மீது அதிகம் உடைமை கொள்வதால் இது சில புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். நீங்கள் இந்த காலகட்டத்தில் மிக பொறுமையோடு செயல் பட வேண்டும். அவ்வாறு செய்தால் பல பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். உங்களது விருப்பத்தின் மீது உங்கள் பெற்றோர்கள் இடுபாடு காட்ட மாட்டார்கள். இதனால் நீங்கள் சற்று மனம் தளர நேரலாம்.
கர்ப்பிணி பெண்கள் தனிமையாக இருப்பதையும் மன அழுத்தத்துடன் இருப்பதையும் தவிர்ப்பது நல்லது. உங்களுடுன் உங்களது கணவர், பெற்றோர்கள் அல்லது தோழிகள் தொடர்பில் அல்லது பக்கத்தில் இருப்பது உங்களை மகிழ்விக்கும். நீங்கள் இந்த பெயர்ச்சியின் மூன்றாம் பாகத்தில் சுப காரியம் நடத்தலாம் எனினும் அது அதிக செலவுகளை அல்லது மன அழுத்தத்தை உண்டாகலாம்.


உங்களுக்கு எதிர் பார்த்த வேலையும் பதவி உயர்வும் கிடைத்ததால் நீங்கள் கடினமாக உழைத்து உங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய தருணம் இது. உங்களது வேலை சுமை அதிகரிக்கலாம். அதனால் அதனை தக்க நேரத்தில் முடிக்க நீங்கள் அதிக நேரம் உங்களது அலுவலக பணியை முடிக்க செலவிட வேண்டியதிருக்கும். தொழிலதிபர்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம். அது உங்களது வளர்ச்சியை பாதிக்க கூடும். உங்களது ப்ரோஜெக்ட்டை தக்க நேரத்தில் முடிக்க நீங்கள் அதிக நேரம் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அவ்வாறு செய்தால் மட்டுமே உங்களது வாடிகையாலரையும் செல்வாக்கையும் தக்க வைத்து கொள்ள முடியும்.
மருத்துவ செலவுகளும் பயண செலவுகளும் அதிகரிக்கலாம். அதனால் உங்களது செலவின் மீது கவனம் தேவை. இந்த மூன்றாம் பாகத்தின் காலகட்டத்தில் சமிப்பை அதிகரிப்பது நல்லது. மார்ச் 09, 2018 வரை ரியல் எஸ்டேட் சம்பந்தமான எந்த விடயத்திலும் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. நீங்கள் எதிர் பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கு தாமதம் ஆகலாம். எனினும் அது உங்களுக்கு தாமதமானாலும் கிடைத்து விடும். பங்கு சந்தையில் சிந்தித்து முதலீடு செய்வது நல்லது. நாள் வர்கர்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்லது.



Prev Topic

Next Topic