குரு பெயர்ச்சி (2017 - 2018) வேலை / உத்யோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

வேலை / உத்யோகம்


கடந்த ஒரு வருடமாக குரு 4ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் நீங்கள் ஒரு கலவையான பலன்களையே சந்தித்து வந்திருப்பீர்கள். ஆனால் இப்பொழுது ஜூலை 2017 முதல் சனியின் பலம் அதிகரித்து பல நல்ல மாற்றங்களை நீங்கள் உங்களது உத்யோகத்தில் காண்பீர்கள். மேலும் குரு 5ஆம் வீட்டிற்கு சஞ்சரிக்க உள்ளதால், பல மகிழ்விக்கும் செய்திகள் உங்களை தேடி வரும். மேலும் பல நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைத்து நீங்கள் உத்யோகத்தில் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள்.
புதிதாக வேலை தேடுபவர்களுக்கு எதிர் பார்த்தபடியே வேலை கிடைப்பதற்கு இது ஏற்ற காலம். நீங்கள் நேர்முக தேர்வில் வெற்றி பெற்று பெரிய கம்பெனிகளில் நல்ல சம்பளத்தோடு வேலைக்கு சேர இந்த பெயர்ச்சி காலம் ஏற்றதாக உள்ளது. அதுமட்டும் இல்லமால் நீங்கள் எதிர் பார்த்த இடத்திலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும். மேலும் வெளி நாட்டில் பனி புரிய காத்திருப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி காலம் குருவின் பலத்தால் எதிர் பார்த்த வாய்ப்பை கொண்டு வரும். நீண்ட காலமாக ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்காக காத்திருந்திருந்தவர்களுக்கு தற்போது தாமதம் இன்றி எதிர் பார்த்த பலன்கள் கிடைக்கும்.
உங்களது மேலாளரும் உடன் வலை பார்ப்பவர்களும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். உங்களது கடின உழைப்பை அவர்கள் மதித்து அதற்க்கு தக்க சன்மானமும் ஊதிய உயர்வையும் கொடுப்பார்கள். மேலும் உங்களது மகா தசை நல்ல நிலையில் இருக்கின்றது என்றால் உங்களுக்கு உயர் பதவி பெறுவதற்கும் இந்த குரு பெயர்ச்சி காலம் மிக சாதகமாக உள்ளது.


ஒப்பந்த ரீதியில் வேலை பார்ப்பவர்களுக்கு உங்களது பனி நிரந்தரமாகவும் இந்த பெயர்ச்சி காலம் சாதகமாக உள்ளது.
ஏதேனும் சட்ட சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டுல்லீர்கள் என்றால்; அதில் இருந்து சாதகமான தீர்ப்போடு விடுபடுவீர்கள். சிலருக்கு அரசு உத்யோகம் கிடைப்பதற்கும் இந்த பெயர்ச்சி காலகட்டம் சாதகமாக உள்ளது. மேலும் வெளிநாட்டிற்கு வேலை தேடுபவர்களுக்கு சுலபமாக விசா மற்றும் குடியேற்றம் பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி காலம் உங்களது உத்யோக வளர்ச்சியிலும் நிதி நிலையிலும் நல்ல வெற்றி தரக்கூடியதாகவே உள்ளது.



Prev Topic

Next Topic