குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


கடந்த ஒரு வருடமாக உங்களுக்கு ஆறுதல் நிறைந்த வருடமாக இருந்திருக்க கூடும். எனினும் இப்பொழுது நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் 2ஆம் வீட்டில் இருந்து 3ஆம் வீட்டிற்கு செல்வதால், உங்களது வாழ்க்கையில் பல சோதனைகளையும் தடைகளையும் ஏற்படுத்த கூடும். எனினும், இந்த நிகழவிருக்கும் குருபெயர்ச்சி காலகட்டத்தில், ராகுவும் கேதுவும் நல்ல நிலையில் சஞ்சரிக்க உள்ளதால், உங்களுக்கு சற்று ஆறுதல் நிறைந்த காலமாக இருக்கும்.
அது மட்டும் அல்லாது, வரும் அக்டோபர் 25, 2017 அன்று நிகழவிருக்கும் சனி பெயர்ச்சி உங்களது தொழில் மற்றும் உத்யோகத்திற்கு நல்ல சூழலை உருவாக்க கூடிய பலன்களை தர உள்ளது. மொத்தத்தில் அடுத்த 12 மாதங்களுக்கு நீங்கள் ஒரு கலவையான பலன்களை எதிர் பார்க்கலாம். உங்களது உடல் நலம் மேம்படும் மேலும் இது நாள் வரை இருந்த வைத்திய செலவுகள் குறையத் தொடங்கும்.


இருப்பினும், உங்களது குடும்பம் மற்றும் சொந்த விசயங்களில் சில பிரச்சனைகள் வரக்கூடும். இதனால் நீங்கள் சற்று பதட்டத்துடனும் படபடப்புடனும் காணப் படுவீர்கள். நிதி மற்றும் வருமானம் பொறுத்தவரையில் அதிர்ஷ்டம் சற்று குறைவாகவே உள்ளது. மேலும் உங்களது செலவுகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும்.
அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களது குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிக பொறுமையுடனும் சாதூர்யத்துடனும் செயல்பட வேண்டும். முக்கியமாக உங்களது குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடுவது நல்லது. இது அவர்களுடன் நல்ல உறவை வழக்க உதவும்.
நீங்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபடுவதால் உங்களது தொழில் அல்லது உத்யோகத்தில் ஏதும் தொந்தரவோ தடையோ. இருக்காது உங்களது வருமானம் உயரும், மேலும் உங்களது உத்யோகத்தில் நல்லதொரு சூழலை எதிர் பார்க்கலாம். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவே இருக்கும். எனினும், புதிய முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலம் இல்லை. மொத்தத்தில், இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் ஒரு கலவை நிறைந்த பலன்களை எதிர் பார்க்கலாம்.




Prev Topic

Next Topic