குரு பெயர்ச்சி (2017 - 2018) வர்த்தகம் மற்றும் முதலீடு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


நீங்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்த வரும் அக்டோபர் 25, 2017 அன்று விடுபட்டாலும், புது முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலம் இல்லை. குரு 3ஆம் வீட்டிலும், சனி 5ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களது அதிர்சட்டதை குறைக்க கூடும். மேலும் ராகு 12ஆம் வீட்டில் நிலவுவதால் உங்களது முதலீடு சில நட்டத்தையும் ஏற்படுத்த கூடும்.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலம் இல்லை. நீங்கள் அதிக சோதனைகளை எதிர் கொள்ள கூடும். மேலும் நீங்கள் தவறான கணிப்பால் உங்களது முதலீட்டை இல்லக்கவும் நேரலாம். நீங்கள் தின அல்லது ஊக வர்த்தகம் செய்பவராக இருந்தால் சிறிது காலம் எந்த முதலீட்டிலும் அடுத்த 12 மாதங்களுக்கு ஈடுபடாமல் இருப்பது நல்லது.


மேலும் வீடு மனை வாங்குவதற்கு இது ஏற்ற காலம் இல்லை. நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம். உங்களது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாள் குடி இருப்பவர்கள் உங்களுக்கு சில சிக்கல்களை தர கூடும். நீங்கள் நிலம் வைத்திருந்தால் தேவையற்றவர்கள் பிரச்சனை தரக்கூடும். மொத்தத்தில் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக எந்த முதலீடும் அல்லது முயற்சியும் செய்ய வேண்டாம். எனினும் அப்படி செய்ய வேண்டிய சூழல் நேர்ந்தால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்ளவது உத்தமம்.



Prev Topic

Next Topic