![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
வரும் அக்டோபர் 25, 2017 அன்று ஏழரை சனியில் இருந்து விடுபடுபவர்களுக்கு, முக்கியமாக தொழில் புரிவோர்களுக்கு சற்று ஆறுதலான காலமாகும். ஜென்ம குருவருளும் ராகுவால் உங்களுக்கு பிரச்சனைகள் வரவிருந்தாலும், நீண்ட கால பலன்களை கருதும் போது அவர்களின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். நீண்ட கால முதலீடு கொண்டு ஏதேனும் தொழில் தொடங்க உள்ளீர்கள் என்றால் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் தொடங்கலாம். எனினும் அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் எந்த ஒரு பெரிய வளர்ச்சியையும் லாபத்தையும் எதிர் பார்க்க முடியாது. நீங்கள் உங்களது தொழிலை இருக்கும் நிதியை கொண்டே சமாளிக்க வேண்டும். எனினும் நீங்கள் அதிகம் அனுபவத்தை கற்றுருப்பீர்கள். இது உங்களது நிர்வாக திறமையை வளர்க்க உதவும்.
நீங்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு அதிக வளர்ச்சியையும் லாபத்தையும் எதிர் பார்த்தல், சிறிது ஏமாற்றமே மிஞ்சும். எனிமும் பொறுமையாக இருப்பது நல்லது. மேலும் புது முதலீடு அல்லது முயற்சிகளை சற்று தள்ளி போடுவது நல்லது. அதுமட்டும் அல்லாது புதிதாக பணி ஆட்கள் நியமனம் செய்யவதையும் குறைத்துக் கொள்வது நல்லது. உங்களது புது முயற்சியால் அல்லது ஏற்கனவே ஈடுபட்டுள்ள ப்ரொஜெக்ட்டுகள் ஏதேனும் இருந்தால் அதை சரியாக செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் எழலாம். மேலும் இதனால் அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் உங்களது முக்கியமான வாடிக்கையாளர்களை இல்லக்கவும் நேரலாம். ஆதலால் அதிக கவனம் தேவை.
நீங்கள் கூட்டு தொழிலில் ஈடுபட்டிருந்தால், உங்களது பங்குதாரர் ஏதேனும் பிரச்சனை செய்யக் கூடும். மேலும் நீங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து ஏதேனும் நிதி உதவி வேண்டினாலும் அது கிடைப்பதில் சில சிக்கல்கள் அல்லது தாமதம் உண்டாகும். உங்களுக்கு வாங்கி கடன் எளிதில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், நீங்கள் அடமான சொத்து அல்லது வேறு வகையான பாத்திரம் போன்றவை தர வேண்டியதிருக்கும். மேலும் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இதனால் உங்களது பணம் அல்லது நிதி வரத்து குறைய வாய்ப்புள்ளது. நீங்கள் நிதி நிலை பொறுத்தவரையில் கொஞ்சம் கடினமாக உழைக்க, சிந்திக்க வேண்டியதிருக்கும். நீங்கள் தேவையற்ற செலவுகளை குறைக்க அதிகம் போராட வேண்டியதிருக்கும். எனினும் லாபம் ஈட்டுவதில் அதிக சவால்களை சந்திக்க வேண்டும்.
சுய தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மாற்று கமிஷன் ஏஜெண்டுகள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சற்று கவனமாக செயல் பட வேண்டும். நீங்கள் எதிர் பார்த்த சன்மானம் அல்லது லாபம் கிடைக்கவில்லை என்றால் வருத்தம் கொள்வதை விடுத்தது சிந்தித்து செயல் படுவது நல்லது.
Prev Topic
Next Topic