![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
கடந்த ஒரு வருடமாக உங்களது குடும்பத்திரனாரிடமும் மற்றும் உறவினர்களிடமும் நீங்கள் நல்ல உறவில் இருந்திருப்பீர்கள். மேலும் அவர்களுடன் இணைத்து சில சுப காரியங்களும் செய்திருப்பீர்கள். ஆனால் இப்பொழுது குரு உங்கள் ராசியின் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால் சில கசப்பான அனுபவங்களையும் சூழ்நிலைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். இது உங்களது குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதிக்க கூடும். நீங்கள் பல சவால்களையும் சந்திக்க நேரிடலாம். உங்களது வாழ்க்கை துணைவர், குழந்தைகள் மற்றும் மாமனார் மாமியார் வீட்டினருடன் சில சிக்கல்ககளை சந்திக்க நேரலாம்.
உங்களது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் உங்களது வாழ்க்கை துணைவர் உறுதுணையாக இருக்க மாட்டார். ஆனால் அவருடன் நீங்கள் அதிக வாக்குவாதம் மற்றும் பிரச்சனைகளில் ஈடுபடக் கூடும். உங்களது குழந்தைகள் சில கெட்ட செய்திகளை கொண்டுவரலாம். இது உங்களது மனதை பெரிதும் பாதிக்க கூடும். மேலும் நீங்கள் உங்கள் உறவுகளிடத்தில் தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளலாம். இது உங்கள் நிம்மதியை பெரிதும் பாதிக்கும்.
நீங்கள் உங்களது மகள் அல்லது மகனுக்கு வரன் தேடுகுறீர்கள் என்றால், அது தேவையற்ற காரணங்களால் தள்ளிப் போகலாம். எனினும் பிற்பாடு நீங்கள் அது உங்களது மறைமுக எதிரியால் தான் தடை பட்டது என்பதை உணருவீர்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருக்குமெனில், அத்தகைய சுப காரியங்கள் நிற்கவும் வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தலாம். உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி சுப காரியங்கள் நடத்துவது உத்தமம். அல்லது சில நாட்களுக்கு அதை தள்ளி போடலாம்.
எனினும் சனி உங்களது ராசிக்கு நல்ல நிலையில் உள்ளதால், அவர் உங்களுக்கு ஆறுதலாக இருந்து தன்னம்பிக்கை கொடுப்பர். உங்களது நண்பர்கள் வாயிலாக அவர் உங்களுக்கு பல நன்மைகளை கொண்டு சேர்ப்பர். நீங்கள் சரியான முடிவெடுக்க உதவுவார். மொத்தத்தில் இது ஒரு கலவையான காலகட்டமாகும். சிந்தித்து செயல்படுவது உத்தமம்.
Prev Topic
Next Topic