![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
உங்களது செலவுகளில் அதிக கவனம் தேவை. அதிகம் யோசித்து நிதி அல்லது செலவுகள் குறித்த முடிவுகளை எடுப்பது உத்தமம். ஜென்ம குரு அடுத்த 12 மாதங்களுக்கு உங்களது நிதி நிலையை பெரிதும் பாதிக்க கூடும். எனிமும் சனியன் பலத்தால் உங்களது வருமானம் சீராக இருக்கும். எனிமும் உங்களது செலவுகள் கட்டுப்பாட்டை மீறி செல்லும். பயணம், மருத்தவம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்ற விசயங்களில் உங்களது சேலவுகள் அதிகரிக்கும். நீங்கள் உங்களது செலவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் கடன் வாங்கி உங்களது அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். அதனால், உங்களது கிரெடிட் கார்டு போன்றவற்றின் மீது சிறிது கட்டுப்பாட்டுடன் இருப்பது புத்திசாலித்தனமாகும்.
உங்களது கடன் மதிப்பு குறைவாக இருந்தால்,வங்கிகள் உங்களுக்கு கடன் தருவதில் சிக்கல்கள் உண்டாகும். மேலும் உங்களது கிரெடிட் கார்டு காலாவதி ஆகும் தேதி நெருங்கும் சூழலில், நீங்கள் உங்களது கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டியதும் இருக்கும். தங்க நகைகள் வாங்குவதற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை . உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் உங்களது சொத்துக்களை பண தேவைக்காக விற்க வேண்டிய நிலையம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றில் முயற்சிக்க இது ஏற்ற தருணமும் இல்லை. பிறரிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்க்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்தோ உங்களது நண்பருடன் சேர்த்து ஏதேனும் தொழில் அல்லது பணம் சம்பந்தமாக கையெழுத்து போடுவதோ இருந்தால் அதை தவிர்க்கவும். ஏனெனில், இறுதியில் அந்த பணத்தை நீங்களே முழுக்க கட்ட வேண்டியது வரலாம். தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்டு, பெருமாளை வணங்கி வந்தால், உங்களது பண பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும்.
Prev Topic
Next Topic