![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | முதல் பாகம் |
Sep 11, 2017 to Oct 25, 2017 பண நட்டம் (25 / 100)
இந்த குரு பெயர்ச்சியின் முதல் பாக காலகட்டத்தில் சனி பகவான் ஏழரை ஆண்டுகளின் இறுதி கட்டத்தில் உள்ளார். மேலும் குரு உங்களது 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு பல மோசமான விளைவுகள் நிகழக் கூடும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வரக் கூடும். உங்களது குடும்பத்திலும் சில பிரச்சனைகள் அவ்வப்போது வரக் கூடும். அதனால் இந்த காலக்கட்டத்தில் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்க்காமல் திருமணத்திற்கான முயற்சியில் எதுவும் ஈடுபடக் கூடாது. மேலும் உங்களுக்கு திருமணம் ஆகாத மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களுக்கு வரன் தேடுவதை சற்று தள்ளி போடவும். ஏனென்றால் இந்த காலகட்டத்தில் எதுவும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மேலும் உங்களது குழந்தைகள் உங்களுக்கு அதிர்ச்சி தரக் கூடிய கெட்ட / தவறான செய்திகளை கொண்டு வரக் கூடும். உங்களது மனைவி / கணவன் வீட்டார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடும். நீங்கள் வழக்குகள் எதிலேனும் உள்ளீர்கள் என்றால் சற்று யோசித்து செயல் படவும், ஏனெனில் அது உங்களுக்கு எதிர் பாராத பண நட்டத்தில் கொண்டு போய் விடலாம்.
உங்களது அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கலாம். அதனால் உங்களது குடும்பத்திற்காக நேரம் செலவிட முடியாமல் நீங்கள் அவதிப் பட கூடும். உங்களது ஜென்ம ஜாதகம் சாதகமாக இல்லை என்றால், நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படலாம். அதனால் இந்த பெயர்ச்சி காலத்தின் முதல் பாகத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு எதையும் எதிர் பார்க்காமல் உங்களது வேலையில் முழு கவனத்தோடு செயல்படுவதே நல்லது. அது உங்களது வேலையை தக்க வைத்து கொள்ள உதவும். மேலும் நீங்கள் புதிதாக வேலை தேடுகுரீர்கள் அல்லது வேலையில் மாற்றம் எதிர் பார்கின்றீர்கள் என்றால், அதற்க்கான நேரம் இது இல்லை. ஏனென்றால் நீங்கள் நேர்காணலில் தோற்க நேரலாம், அது உங்களது மனதையும் நம்பிக்கையையும் பாதிக்கலாம்.
தொழிலதிபர்கள் எதிர் பாராத பின்னடைவுகளையும் பண நட்டத்தையும் காண நேரலாம். அதனால் தேவையற்ற செலவுகளை குறைப்பதோடு மிக கவனமாக உங்களது நிதி குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும்.
குரு பெயர்ச்சியின் முதல் பாகம் 6 வாரங்களுக்கு மட்டுமே இருந்தாலும் அது உங்களது நிதி நிலையை பெரிதும் பாதிக்க கூடும். உங்களது வருமானம் குறையக் கூடும். மேலும் செலவுகள் கட்டுப்பாட்டை மீறி செல்லக் கூடும். மேலும் வழக்குகளால் நீங்கள் பெரிய அளவில் பணத்தை இல்லக்க கூடும். அதுமட்டும் இன்றி சொத்துகள் வாங்கல் மற்றும் விற்பதும் நட்டத்தை ஏற்படத்தலாம். ஊக வர்த்தகர்கள் மற்றும் நாள் வர்த்தகர்கள் பங்கு சந்தையில் நட்டத்தை காண நேரிடும். உங்களது வீடு அல்லது மனை போன்றவற்றை கடன் அடைப்பதற்காக நீங்கள் விற்க கூடும். எனினும் ரியல் ஈஸ்ட்டில் முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. எனினும் அக்டோபர் 25, 2017 உங்களுக்கு சனி பெயர்ச்சியால் சில நன்மைகள் கிடைக்க கூடும். ஏனென்றால் உங்களது ஏழரை சனி காலம் முடிவடைகின்றது.
Prev Topic
Next Topic