குரு பெயர்ச்சி (2017 - 2018) உடல் நலம் / ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

உடல் நலம் / ஆரோக்கியம்


குரு உங்களது ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதால், நீங்கள் உங்கள் உடல் நலத்தில் சற்று கவனமாகவே இருக்க வேண்டும். மேலும் கேது 4ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால், நீங்கள் மனதளவில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும். நீங்கள் சோர்ந்து காணப் படுவீர்கள், மேலும் உங்கள் மனதில் அதிக குழப்பங்கள் எழும். குரு உங்களது சக்திகளை சீக்கிரம் உரிந்திடுவார். நீங்கள் சிறிய வேலை செயய்த்தாலம் விரைவில் சோர்ந்து விடுவீர்கள். மேலும் உங்களது உடல் எடையில் அதிக மாற்றத்தை காணிப்பீர்கள். உங்களது உடல் எடை விரைவாக கூடும் அல்லது குறையும்.
மேலும் உங்களது எதிர்ப்பு சக்தி அதிகம் குறைய வாய்ப்பு உள்ளது. உடம்பில் உங்களது கொழுப்பு அளவு அதிகரிக்கும். இது உங்களது சுறுசுப்பை பாதிக்கும். அதனால் நீங்கள் உங்களது உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து உடற்ப் பயிற்சி செயவது ஓரளவுக்கு உங்களது உடல் அரோக்கியதை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவும். மேலும் நீங்கள் உங்களது நட்பு வட்டாரத்தில் சற்று கவனமாக இருக்கு வேண்டும். அவர்கள் உங்களை திசை திருப்ப கூடும். உங்களை அவர்கள் தவறான பாதையில் வழி நடத்தக் கூடும். மேலும் நீங்கள் தவறான பழக்கத்திற்கும் ஆளாக கூடும்.


எனினும் உங்களுக்கு சனி பகவானிடம் இருந்து நல்ல ஆறுதல் கிடைக்கும். உங்களுக்கு உடல் அரோக்கிய பிரச்சனைகளில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும். இதனால் நீங்கள் உங்களது இயல்பான நிலைக்கு திரும்பலாம். உங்களுக்கு சரியான மருந்து மற்றும் மருத்துவம் கிடைக்கும். நீங்கள் உங்களது உணவில் அதிக நார் சத்து மற்றும் புரத சத்து உள்ள காய் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளவும். ஆதித்ய ஹரிதய மற்றும் ஹனுமன் சாலிசா தொடர்ந்து கேட்டு வருவது உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும். நீங்கள் அதிகம் தியானம் செய்யவது உங்களது மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் தொடர்ந்து பிராத்தனை மற்றும் கடவுள் வழிபாடு செய்வது அதிக நேர் மறை சக்திகளை உங்களுக்கு தரும். இதனால் நீங்கள் உங்களது வாழ்க்கையில் சில பிரச்சனைகளில் இருந்த்து தப்பிப்பீர்கள்.


Prev Topic

Next Topic