குரு பெயர்ச்சி (2017 - 2018) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

காதல்


உங்களது காதல் விவகாரங்களில் கடந்த ஒரு வருடமாக நீங்கள் ஒரு கலவையான பலன்களை சந்தித்து வந்திருப்பீர்கள். எனினும் இப்பொழுது ஜென்ம குரு சஞ்சரிக்க உள்ளதால், நீங்கள் மேலும் பல சோதனைகளை சந்திக்க நேரலாம். உங்களது உறவில் சில பிரச்சனைகள் வரக் கூடும். நீங்கள் அதிக பொறுமையாகவும் கவனத்துடனும் செயல் பட வேண்டும். சில மன வேறுபாடுகளும் உங்களுக்கு மத்தியில் தோன்றலாம்.
முக்கியமாக உங்களது பெற்றோர்களுக்கு உங்களது காதல்/விருப்பத்தை பற்றி தெரிய வந்தால் அதற்கான ஒப்புதல் பெறுவது பெரும் கடினமான விடயமாகும். மேலும் இரு குடும்பத்தினருக்கும் சன்டையையும் குழப்பத்தையும் உருவாக்கக் கூடும். மேலும் அனைவரது மன நிம்மதியும் கெடும். நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால், ஒரு வருடத்திற்கு காத்திருந்து பின் அதற்கான முயற்சியை எடுக்கலாம்.


மேலும் நீங்கள் யாரையாவது விரும்பினால், அவர்களிடத்தில் உங்களது விருப்பத்தை கூறுவதற்கு இது ஏற்று காலகட்டமல்ல. மீறி கூற முயன்றால் அவர்கள் உங்களை அவமானப்படுத்தக் கூடும். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் கடினமான காலத்தை கடக்க வேண்டும். நீங்கள் உங்களது நண்பர்களுக்கு மத்தியில் அவமானப் படக் கூடும். இது உங்களை மனதளவில் அதிகம் பாதிக்க கூடும்.
நீங்கள் புதிதாக திருமணம் மாணவராக இருந்தால் சில மன வேறுபாடுகள் உங்களது கணவன்/மனைவிக்கு மத்தியில் ஏற்படலாம். அவரை புரிந்து கொள்வது உங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கும். மேலும் நீங்கள் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அதிக பொறுமையோடு இருக்க வேண்டும். மேலும் தேன் நிலவு செல்வது அல்லது குழந்தை பேருக்கு முயற்சிக்க இது ஏற்ற காலம் அல்ல. நீங்கள் ஏதேனும் அவரசத்தில் முடிவெடுத்தால் அது உங்களது கணவன் மனைவி உறவையே பாதித்துவிடும். எனினும் சனியின் உதவியால் நீங்கள் இந்த கடினமான காலத்தை எப்படியாவது அடுத்த ஒரு வருடத்திற்கு கடந்து விடுவீர்கள்.




Prev Topic

Next Topic