குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


கடந்த ஒரு வருடமாக குரு உங்களது ராசியில் 12ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு பல விரய செலவுகளை தந்திருப்பார். பயணம், சுப காரியம் போன்றவற்றில் உங்களது செலவுகள் எதிர் பார்த்ததை விட அதிகமாகி இருந்திருக்கும். இப்பொழுது குரு உங்களது ஜென்ம ஸ்தானத்தில் முதல் முறையாக சஞ்சரிக்க உள்ளார். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இல்லை. நீங்கள் உங்களது குடும்பத்தில், உடல் ஆரோக்கியத்தில் மற்றும் நிதி விடயத்தில் பல சிக்கல்களை அடுத்த 12 மாதத்திற்கு சந்திக்க நேரிடலாம்.
எனினும் நீங்கள் வரும் அக்டோபர் 25, 2017 அன்று ஏழரை சனியில் இருந்து வெளி வருவதனால், உங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். இருப்பினும் ராகு உங்களது ராசிக்கு 10ஆம் வீட்டிலும், கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவாக நல்ல சூழலை தராது. அதனால் நீங்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு ஒரு கலவையான பலன்களையே சந்திப்பீர்கள்.




சனி உங்களுக்கு நேர்மறை பலன்களை நீண்ட நாள் முயற்சி அல்லது ப்ரொஜெக்ட்டுகளுக்கு மட்டுமே தரக்கூடும். நீங்கள் ஏதேனும் குறுகிய கால ப்ரொஜெக்ட்டுகள் செய்குறீர்கள் என்றால், இதை மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் எந்த முயற்சியிலும் பொறுமையாக இருந்து அடுத்த இரண்டு வருடங்களுக்கு பின் பலன்களை எதிர் பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் முயற்சிக்கலாம். அது உங்களுக்கு ஓரளவு ஆறுதலாகவும் இருக்கும்.




அடுத்த 12 மாதங்களுக்கு நீங்கள் பெரிதாக எந்த முயற்சியும் எடுப்பதை பற்றி சற்று யோசிக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டில் ஏதேனும் சுப காரியம் செய்ய உள்ளீர்கள் என்றால், உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செய்யவது நல்லது. அடுத்த ஒரு வருடம் உங்களுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை பலன்களை கலந்தே தரும்.

Prev Topic

Next Topic