![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
ஜென்ம குரு உங்களை வெளி நாட்டரிக்கு பயணம் செய்ய வைப்பார், கூடவே பிரச்சனைகளையும் உருவாக்குவார். நீங்கள் எதிர் பார்த்த படி வசதியான தங்கிருப்பு கிடைப்பதில் சிக்கல்எழலாம். நீங்கள் உங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகி தனியாக இருக்க கூடும். இது உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். மேலும் நீங்கள் தொழில் ரீதியாக வெளி நாட்டிற்கு பயணம் செய்யப் போகுறீர்கள் என்றால், அது உங்களுக்கு சாதகமானதாக இருக்காது. எதிர் பார்த்த வெற்றி கிடைப்பதில் சந்தேகம். நீங்கள் எதிர் பார்த்த ப்ரொஜெக்ட்டுகள் கிடைப்பதும் சந்தேகமே. மேலும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் வெளி நாட்டில் குடியேற்றம் செய்வதற்கான முயற்சில் ஈடுபடுவது நல்ல செயலாக இருக்கது. இதனால் நீங்கள் பல சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும்.
எனினும் நீங்கள் புண்ணிய யாத்திரை போன்ற பயணங்களை மேற்கொள்ளலாம். இருப்பினும், நீண்ட தொலைவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. நீங்கள் சுப காரியத்திற்காக பயணித்தாலும் அது உங்களுக்கு அதிக செலவில் கொண்டு போய் முடியும். நீங்கள் அத்தகைய பயணத்தில் உங்களது நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ சௌகரியமாக உணர மாட்டீர்கள்.
நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவர் என்றால், விசா சம்பந்தமான விசயங்களில் சில பிரச்சனைகள் உருவாகக் கூடும். மேலும் நீங்கள் உங்களது தாய் நாட்டிற்கு திரும்பும் நிலையம் ஏற்படலாம். நிரந்தர குடியுரிமை, கிரீன் கார்டு போன்ற முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தராது. இருப்பினும், நீங்கள் அவசியம் வெளி நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டுமென்றால் அல்லது குடியுரிமை பெற எண்ணினால், உங்களது ஜோதிடரை அணுகி ஜென்ம ஜாதகத்தி பார்த்து அதன் படி நடந்து கொள்வது உத்தமம்.
Prev Topic
Next Topic