![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வேலை / உத்யோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வேலை / உத்யோகம் |
வேலை / உத்யோகம்
கடந்த ஒரு வருடமாக ஒரு கலவையான பலன்களையே நீங்கள் சந்தித்து வந்திருப்பீர்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் இப்பொழுது வரவிருக்கும் அக்டோபர் 25, 2017 அன்று ஏழரை சனியில் இருந்து வெளிவர போகுறீர்கள். இது உங்களது உத்தியோகத்திலும் முன்னேற்றத்திலும் பெரிதும் உதவும், முக்கியமாக நீண்ட கால பலன்களை நீங்கள் எதிர்ப் பார்க்கலாம். எனினும் ராகு 10ஆம் வீட்டிலும் குரு ஜென்ம ஸ்தானத்திலும் நிலவுவதால் அவர்கள் உங்களுக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்த கூடும். மேலும் உங்களது உத்யோகத்தில் நீங்கள் வெற்றி பெறுவதில் சில சிக்கல்களும் நேரலாம்.
நீங்கள் புது வேலைக்காக முயற்சி செய்குறீர்கள் என்றால் அது சனியின் பலத்தால் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் அதில் நீங்கள் நல்ல வளர்ச்சியை காண முடியாது. உங்களது உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதில் அதிக தாமதம் ஆகலாம். உங்களது முதலாளி அல்லது மேலாளர் உங்களுக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். நீங்கள் மிக கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களது அலுவலகத்தில் உங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும். மேலும் மறைமுக எதிரிகள் அதிகம் தோன்றுவார்கள். அவர்கள் உங்களது பலத்தை குறைக்க கூடும். நீங்கள் 24/7 உழைத்தாலும் உங்களால் உங்களது மேலாளரை மகிழ்ச்சி அடைய செய்ய முடியாது.
சனி உங்களது ராசியில் நல்ல நிலையில் இருப்பதால், சில சங்கடங்களையும், அவமானத்தையும் அவர் தடுப்பார். எனினும் உங்களது ஜென்ம ஜாதகம் பலவீனமாக இருந்தால், சற்று சோதனைகளை நீங்கள் நிச்சயம் எதிர் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களுக்கும் உங்களுக்கும் சில மோதல்கள் எழுந்தாலும் அதில் அதிக ஈடுபாடு காட்டாமல் சற்று விலகி செல்வது உத்தமம். உங்களை பற்றி உடன் வேலை பார்ப்பவர்கள் மேலாரிடம் புகார் சொல்லக் கூடும். எனினும் நீங்கள் அனைத்தையும் சாதூர்யமாக சமாளித்து அடுத்த 12 மாதங்களை கடந்து விடுவீர்கள். அணைத்து சூழலிலும் பொறுமை காப்பது நல்லது.
Prev Topic
Next Topic