![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் வேற்று வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | தொழில் மற்றும் வேற்று வருமானம் |
தொழில் மற்றும் வேற்று வருமானம்
தொழிலதிபர்கள் கடந்த ஒரு வருடமாக நல்ல லாபகரமான மற்றும் வெற்றிகரமான சூழலை பார்த்திருப்பீர்கள். குருவின் பலத்தால் உங்களது தொழில் நல்ல நிலையில் இருந்திருக்கும். தற்போது நீங்கள் நல்ல பேருடனும் செல்வாக்குடனும் இருப்பீர்கள்.எனினும் உங்களது தொழில் தொடர்ந்து ஒரு வளர்ச்சி மிகுந்த பாதையில் செல்ல நீங்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து செயல் படுவது நல்லது. உங்களது பங்குதாரரிடமோ, அல்லது ஊழியர்களிடமோ சில பிரச்சனைகள் எழக்கூடும். நீங்கள் உங்களது போட்டியாளர்களிடம் சண்டையிடவும் நேரலாம். சில சட்ட சிக்கல்களும் எழலாம். அதனால் உங்களது ஜென்ம ஜாதகத்தை உங்களது ஜோதிடரிடம் காட்டி ஆலோசனை பெற்று அதன் பின் செயல் படுவது பல பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்க உதவும்.
இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் உங்களது நீண்ட கால வாடிக்கையாளரையும் இழக்க நேரலாம். இதை உங்களது போட்டியாளர்கள் சாதகமாக எடுத்து கொண்டு அவர்கள் லாபம் பெற முயல்வார்கள். மேலும் உங்களது குடும்ப பிரச்சனையால் உங்களது தொழிலில் கவனம் சிதறலாம். அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் அதிக கவனத்தோடு செயல் பட வேண்டிய காலகட்டமாகும். உங்களது நிதி நிலையும் வெகுவாக பாதிக்க கூடும். அது உங்களது மன நிம்மதியை குறைக்கும். வங்கியில் ஏதேனும் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அது ஒப்புதல் பெறுவது சந்தேகமே. முதலீட்டாளர்கள் உங்களது யோசனையை கேட்க மாட்டார்கள். மேலும் உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் அதை திருப்பி கொடுக்குமாறு உங்களை நெருக்கடியில் தள்ளுவார்கள். மேலும் வட்டியையும் உயர்த்துவார்கள்.
சுய தொழில் புரிவோர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள், மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் சற்று கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் பண வரவு பாதிக்க படலாம். உங்களது பேரும் செல்வாக்கும் குறையலாம்.
Prev Topic
Next Topic