குரு பெயர்ச்சி (2017 - 2018) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

கல்வி


குரு உங்களது 7ஆம் வீட்டில் இருந்ததால், கடந்து ஒரு ஆண்டுகாலம் நீங்கள் படிப்பில் அதிக ஆர்வத்துடனும் கவனத்துடனும் படித்திருந்திருப்பீர்கள். நல்ல மதிப்பென்களையும் பெற்றிருப்பீர்கள். மேலும் நீங்கள் விரும்பிய பள்ளி அல்லது கல்லூரியில் உங்களுக்கு சேர்க்கை கிடைத்திருக்கும்.
எனினும் தற்போது குரு உங்களது 8ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்களுக்கு பல தடைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் உங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவீர்கள். மேலும் நீங்கள் கல்லூரியில் பிடிப்பவராக இருந்தால் காதல் வயப் படக்கூடும். இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். எனினும் நீங்கள் உங்களது விருப்பத்தை கூறினாலும் அவர் அதை ஏற்க மறுக்கலாம். உங்களது சொந்த பிரச்சனைகள் உங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் ஆக்கும்.


நீங்கள் நல்ல மதிப்பென்கள் பெற வேண்டுமென்றால் மிக கடினமாக முயற்சித்து படிக்க வேண்டும். நீங்கள் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவராக இருந்தால், உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து பின் கல்லூரி சேர்க்கைக்கு முயற்சிப்பது நல்லது. நீங்க விளையாட்டில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால், வெற்றி பெறுவது கடினமாகும். உங்களது குடும்பத்தினர் அல்லது ஆலோசகரை அணுகி அவர்களிடம் இருந்து ஆலோசனை பெற்று அதன்படி நடந்து கொள்வது ஓரளவுக்கு பிரச்சனைகளை குறைக்க உதவும்.



Prev Topic

Next Topic