குரு பெயர்ச்சி (2017 - 2018) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


குரு உங்களது 8ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால், உங்களது குடும்பம் மற்றும் உறவினர்களை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கும். எனினும் ஒன்றை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒருவர் அனைவருக்கும் நல்லவராக இருக்க முடியாது மேலும் அனைவரையும் த்ரிப்ப்தி அல்லது மகிழ்விக்க முடியாது. அதனால் நீங்கள் முடிந்த அளவு உங்களது குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடுவது மற்றும் அவர்களது தேவைகளையும் எதிர் பார்ப்பையும் புரிந்து கொண்டு அதன் படி நடந்து கொள்வது போன்றவற்றை செய்வதால் குடுமபத்தில் பிரச்சனைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.
உங்களுக்கும் உங்களது மனைவி/ கணவன், அவர்களுது வீட்டார்கள் அல்லது உங்களது பெற்றோர்களுக்கு இடையே தேவை அற்ற வாக்குவாதம் ஏற்படலாம். யார் உங்களிடம் மிக நெருக்கமாக இருந்தார்களோ அவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் வரக்கூடும். அது முக்கியமாக அவர்கள் உங்கள் மீது அதிக உரிமையோடு இருப்பதால் கூட இருக்கலாம். எனினும் நீங்கள் அத்தகைய சூழலை சமாளிக்க மிக பொறுமையாக இருக்க வேண்டும்.


கேது உங்களது 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல ஆலோசகர் கிடைக்க உதவுவார். உங்களது குழந்தைகள் உங்களது பேச்சை கேட்கமாட்டார்கள். மேலும் உங்களது இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை தற்சமயம் தள்ளி வைப்பது நல்லது. மேலும் நீங்கள் வழக்குகள் ஏத்திலேனும் உள்ளீர்கள் என்றால் அதில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைப்பது சற்று சந்தேகமே. விவாகரத்து போன்ற வழக்குகளில் நீங்கள் இருந்தால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அது உங்களது நிதி நிலையை பெரிதும் பாதிக்கலாம்.


Prev Topic

Next Topic