குரு பெயர்ச்சி (2017 - 2018) பணம் / நிதி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

பணம் / நிதி


கடந்த ஒரு வருடமாக உங்களது நிதி நிலை நல்ல முன்னேற்றத்தை கண்டிருக்கும். அதனால் குருவின் பலத்தால் நீங்கள் கடன்களை அடைத்திருப்பீர்கள். ஆனால் தற்போது குரு உங்களது 8ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்களது நிதி நிலை அடுத்த ஒரு வருடத்துக்கு பாதிக்க கூடும். வருமானம் நிலையாக இருந்தாலும் உங்களது செலவுகளும் பணத் தேவைகளும் அதிகரிக்கும். அதனால் உங்களது சேமிப்பு பெரிதாக பாதிக்க கூடும். நீங்கள் உங்களது கிரெடிட் கார்டை நம்பி செலவு செய்ய நேரிடலாம். எனினும் ஆடம்பரமான பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். தேவையற்ற பொழுதுபோக்குகளை குறைப்பதால் செலவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ளலாம்.
உங்களது கடன் மதிப்பு நல்ல நிலையில் இல்லாததால் வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்க மறுப்பார்கள். மேலும் நீங்கள் இருக்கும் கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டியதிருக்கும். தங்கம் வாங்க இது ஏற்ற காலகட்டம் இல்லை. நீங்கள் தக்க காப்பீடுகளை எடுத்து கொள்வது எதிர்பாராத செலவுகளில் இருந்து உங்களை காக்க உதவும்.


சூது மற்றும் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றை முயற்சிப்பதை தற்போது தவிர்ப்பது நல்லது. கடன் வாங்குவதை பெரிதளவில் குறைப்பது நல்லது. மேலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிக்கவும். அப்படி செய்யதால் அது உங்களது பொறுப்பாகிவிடும். நீங்கள் மிக பொறுமையோடு இருக்க வேண்டிய காலகட்டமாகும்.



Prev Topic

Next Topic