குரு பெயர்ச்சி (2017 - 2018) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

Sep 11, 2017 to Oct 25, 2017 மிதமான பின்னடைவு (45 / 100)


அஷ்டமா குரு உங்கள் ராசிக்கு ஆரம்பிக்க உள்ளதால் சில கசப்பான விரயங்கள் உங்களைது வாழ்க்கையில் நடக்க கூடும். இது நாள் வரை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டங்கள் மற்றும் மகிழ்ச்சி மிக்க சூழல்கள் சற்று மாறக் கூடும். மனதளவில் இதனை ஏற்று கொள்வது உங்களுக்கு கடினமாக இருந்தாலும், வேறு வழி இல்லை, நீங்கள் இதனை ஏற்க்க தான் வேண்டும்.
உங்களது மனம் சற்று சஞ்சலம் அடைந்திருப்பதால், உங்கள் மனதில் பயமும் பதற்றமும் ஏற்படலாம். உங்களை சுற்றி குடும்பத்தினர்கள் இருந்தாலும் நீங்கள் தனிமையாக இருப்பது போன்று உங்களுக்கு தோன்றும். மேலும் உங்களது மனைவி / கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களுடன் சில பிரச்சனைகள் தோன்றலாம். நீங்கள் மிக பொறுமையாக இந்த சோதனை மிகுந்த காலகட்டத்தை கடக்க வேண்டியதுள்ளது. மேலும் உங்களது குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்த இது ஏற்ற காலகட்டம் இல்லை. திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் தேடுவதை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. காதலர்களுக்கு இடையே சில மனஸ்தாபங்களும் வாக்குவாதங்களும் வரலாம்.



நீங்கள் உங்களது உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பா உயர்வு ஏதேனும் எதிர் பார்க்கின்றீர்கள் என்றால் அது உங்களுக்கு ஏமாற்றத்தை தரக் கூடும். மேலும் அலுவலகத்தில் உங்களது வேலை சுமை அதிகரிக்கலாம். இதனால் நீங்கள் பதற்றத்துடன் காணப் படுவீர்கள். மேலும் உங்களது உத்தியோகத்தை காப்பாற்றி கொள்ளவும் தொடர்ந்து வேலையில் இருப்பதற்காகவும் நீங்கள் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலாளர் போன்றவர்களிடம் பொருத்து போவது முக்கியம்.
தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத பின்னடைவுகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு கிடைத்த ப்ரோஜெக்ட்டுகள் ரத்தாக கூடும். மேலும் நீங்கள் நீண்ட கால வாடிக்கையாளர்களையும் இழக்க கூடும். தொழில் போட்டி அதிகரிக்கும். அதனால் நீங்கள் மிக பொறுமையாக சிந்தித்து செயல் பட வேண்டியது முக்கியம்.




உங்களது வருமானம் அளவாக இருந்தாலும் செலவுகள் வெகுவாக அதிகரிக்கும். உங்களது சேமிப்பும் விரைவாக குறையும். இதனால் நீங்கள் உங்களது தினத் தேவைகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். இந்த சூழலை சமாளிக்க நீங்கள் பாதுகாப்பான முதலீடுகள் ஏதேனும் செய்வது நல்லது. சூதாட்டம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

Prev Topic

Next Topic