![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) உடல் நலம் / ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
கடந்த ஒரு வருடமாக குரு உங்களது 7ஆம் வீட்டில் இருந்து உங்களை நல்ல ஆரோக்கியத்தோடு வைத்திருந்திருப்பார். எனினும் தற்போது அவர் 8ஆம் வீட்டிற்கு வர உள்ளதால் அது உங்களது உடல் நலத்தை பாதிக்க கூடும். நீங்கள் அதிக மன அழுத்தத்தோடும் மன உளைச்சலோடும் இருப்பீர்கள். சனி 12ஆம் வீட்டிற்கு சஞ்சரிக்க உள்ளதால் உங்களது தூக்கம் வெகுவாக குறையும். உங்களது பெற்றோர்களின் உடல் நலமும் பாதிக்க கூடும். அதனால் மிக கவனமாக செயல் படுவது உத்தமம்.
நீங்கள் மிக நெருக்கமாக இருப்பவர்களிடம் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாக கூடும். அது உங்களது மனைவி/ கணவன், குழந்தைகள், பெற்றோர் அல்லது நெருங்கிய நண்பர்களாக கூட இருக்கலாம். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் உங்களது மன உளைச்சல் அதிகரிக்கலாம். இது உங்களது நிம்மதியை வெகுவாக பாதிக்க கூடும். தினமும் ஹனுமன் சாலிசா மற்றும் சுதர்சன மகா மந்திரம் சொல்வதால் / கேட்பதால் ஓரளவுக்கு பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
உங்களது நட்பு வட்டாரத்தில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு மறைமுக எதிரிகள் அதிகம் தோன்றுவார்கள். மேலும் உங்களது சொந்த விசயங்களை நண்பர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடும். இந்த தருணத்தில் ஒரு நல்ல ஆலோசகரை பார்த்து ஆலோசனை பெற்று அதன் படி நடந்து கொள்வது உத்தமம்.
நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால், அதிக தனிமையை உணருவீர்கள். இது உங்களது மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு நல்ல நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ அருகில் இல்லாததால் நீங்கள் அதிகம் வருத்த படுவீர்கள்.
Prev Topic
Next Topic