குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


கடந்த ஒரு வருடமாக குரு உங்களது 7ஆம் வீட்டில் சஞ்சரித்து வந்ததால் நீங்கள் பல நல்ல சூழல்களையும் அதிர்ஷ்டங்களை பெற்றுரிப்பீர்கள். மேலும் மே 2017 முதல் சனி 9ஆம் வீட்டிலும் ராகு 6ஆம் வீட்டிலும் இருந்து உங்களது வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருந்திருப்பார்கள். தற்போது நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியில் வரும் செப்டம்பர் 11, 2017 அன்று குரு உங்களது 8ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாக உள்ளார். இது சில கசப்பான விசயங்களை உங்களக்கு தரக்கூடும். மேலும் அடுத்து வரவிருக்கும் சனி பெயர்ச்சியில் சனி உங்களது 10ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாக உள்ளார். இது மேலும் உங்களது பிரச்சனைகளை அதிகரிக்கும்.
இந்த குரு மற்றும் சனி பெயர்ச்சி காலகட்டத்தில் நீங்கள் பல சொந்த மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு ஆளாக உள்ளீர்கள். மேலும் உங்களது ஜென்ம ஜாதகம் பலவீனமாக இருந்தால் அது உங்களது மன நிம்மதியை குறைத்து உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம். உங்களது உத்தியோகமும் நிதி நிலையம் இந்த பயற்சி காலத்தில் பாதிக்கக்கூடும். மேலும் உங்களது செல்வாக்கு குறித்து எந்த ஒரு செயலிலும் நீங்கள் அதிக கவனத்தோடு செயல் பட வேண்டும். முக்கியமாக நீங்கள் ஏதேனும் முக்கிய அல்லது பொறுப்பு நிறைந்த உயர் பதவியில் இருந்தால் மிக கவனமாக செயல் பட வேண்டும்.



நீங்கள் அதிக பொறுமையோடு செயல் பட வேண்டும். உங்களது கோபத்தை கட்டுப்படுத்தி எல்லை மீறாமல் பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் கடினமான காலகட்டத்தை கடக்க உள்ளீர்கள். மேலும் உங்களது குடும்ப வாழ்க்கையில், உத்யோகத்தில் மற்றும் நிதி குறித்த எந்த ஒரு முக்கியமான முடிவும் எடுக்க வேண்டாம். நீங்கள் எந்த ஒரு பெரிய வளர்ச்சியும் இல்லாமல் அதே நிலையில் இருந்தாலும் அதுவே உங்களுக்கு இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் ஒரு பெரிய சாதனையே. அதனால் எந்த ஒரு பெரிய எதிர் பார்ப்பும் இல்லாமல் பொறுமையாக செயல் படுவது உத்தமம்.




Prev Topic

Next Topic