குரு பெயர்ச்சி (2017 - 2018) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

Oct 25, 2017 to Mar 09, 2018 சோதனை காலம் (35 / 100)


குருவும் ராகுவும் உங்களது வளர்ச்சியை கடந்த சில வாரங்களாக பாதித்திருந்திருக்க கூடும். தற்போது சனி உங்களது 1௦ஆம் வீட்டிற்கு பெயருவதால் மேலும் பல சிக்கல்கள் உங்களது வாழ்க்கையில் எழக் கூடும். அது உங்களது வளர்ச்சியை பெரிய அளவில் பாதிக்க கூடும். உங்களது உடல் நலமும் எதிர் பாராத விதத்தில் பாதிக்கப் படலாம். நீங்கள் உங்களது மனைவி / கணவன் மற்றும் பெற்றோர்களின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சுப காரியம் ஏதேனும் செய்ய உள்ளீர்கள் என்றால் அதனை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுவது நல்லது. உங்களுக்கு ஏமாற்றம் தரக் கூடிய செய்திகள் வரலாம். அது உங்கள் மனதை கவலைப் பட செய்யும்.
திருமணம் ஆன தம்பதியினர்கள் சில மனஸ்தாபங்களோடு இருப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவர் என்றால், இது உங்களுக்கு ஒரு சோதனை நிறைந்த காலகட்டமாகவே இருக்கும். உங்களது சொந்த விசயங்களை பிறரிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உங்களது மனைவி / கணவன் வீட்டார்களிடம் சண்டை போடக் கூடும். மேலும் நீங்கள் உங்களது உறவினர் மற்றும் குடும்பத்தினர்களுக்கு முன் அவமானப் படக் கூடிய விசயங்களும் நிகழலாம். அதனால் மிக எச்சரிக்கையோடு செயல் படுவது அவசியம். நீங்கள் இந்த குரு பெயர்ச்சியின் இரண்டாம் பாக காலகட்டத்தில் யாரிடமும் உங்களது காதல் விருப்பத்தை கூற வேண்டாம். அது உங்களை வேதனைக்குள்ளாக்க கூடும்.
அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலாலர்ரிடம் வாக்குவாதத்தில் இடுபடக் கூடும். நீங்கள் சில சமயம் அவமானப் பாடவும் நேரலாம். அதனால் நீங்கள் உங்களது வேலையை ராஜினாமா செய்யவும் முயலலாம். எனினும், தற்போது சூழ்நிலை எதுவும் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் நீங்கள் எவ்வாறாவது இதனை சமாளித்து உத்தியோகத்தில் தொடர்ந்து இருக்க முயல்வது புத்திசாலித்தனமாகும். அது உங்களது வாழ்வாதாரத்தை காக்க உதவும். அலுவலகத்தில் பெண்களால் அல்லது மேலாளரால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களது ஜென்ம ஜாதகம் சாதகமாக இல்லை என்றால் உங்களை வேலையில் இருந்தும் எடுக்க கூடும். நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு விசா மற்றும் குடியேற்றம் சம்பந்தமான விசயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு தாய் நாட்டிற்கு திரும்ப கூடும்.


தொழிலதிபர்களுக்கு இது ஒரு கடினமான காலகட்டமாகும். உங்களது பண வரத்து வெகுவாக குறைவதால் நீங்கள் நிதித் தேவைகளை சமாளிக்க தினருவீர்கள். அதனால் சாதூரியமாக சிந்தித்து நட்டம் ஏற்படுவதற்கு முன் வரவு செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். உங்களது ஜென்ம ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் காட்டி தக்க ஆலோசனை பெற்று அதன் படி நடந்து கொள்வது நல்லது.
உங்களது நிதி நிலை பொறுத்த வரையில் இது ஒரு சாவாலான காலகட்டமாகவே இருக்கும். உங்களது கடன் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவிற்கு தேவை இல்லாது கடன் வாங்குவது அல்லது உங்களது கிரெடிட் கார்டை பயன் படுத்துவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் கடன் கொடுப்பதோ அல்லது உங்களது நண்பர் அல்லது உறவினர்கள் கடன் வாங்க உடன் கையெழுத்து போடுவது கூடாது. உங்களது செலவுகளை கட்டுப் படுத்தி கொண்டால் தேவை இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழலை தவிர்க்கலாம். இது உங்களது கடினமான காலகட்டத்தை கடக்க உதவும்.
பங்கு சந்தை வர்த்தகத்தில் இடு படுவது மற்றும் முதலீடு செய்வது போன்றவற்ற்ரை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு எதிர் பாராத நட்டத்தை ஏற்படுத்த கூடும். மேலும் சிலருக்கு அந்த நட்டத்தை சமாளிக்க உங்களது சொத்துக்களை விற்க வேண்டிய சூழலும் எழலாம். அதனால் நட்டத்தோடு பங்கு சந்தையை விட்டு வெளி வருவதை விட அதில் ஈடுபடாமல் இருப்பது தேவையற்ற இழப்புகளை தவிர்க்க உதவும். மேலும் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்க்காமல் எந்த ஒரு முதலீடும் செய்ய வேண்டாம். ஊடகம் மற்றும் திரை துறையில் இருப்பவர்கள் வதந்திகள் மற்றும் சில பிரச்சனைகளுக்கு ஆளாக கூடும். இது உங்களது பேரையும் புகழையும் பாதிக்கும்.



Prev Topic

Next Topic