![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பயணம், வெளி நாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | பயணம், வெளி நாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளி நாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம்
நீங்கள் வெளி நாட்டிற்ற்கு பயணம் செய்ய உள்ளீர்கள் என்றால் அது உங்களுக்கு சாதகமாக இருக்காது. அது உங்களது உடல் நலத்தை பாதிக்க கூடும். மேலும் தேவையற்ற பயத்தை உங்களுக்கு தரலாம். தொழில் காரணமாக பயணிக்க உள்ளீர்கள் என்றால் அது உங்களுக்கு வெற்றிகரமாக இருக்காது. மேலும் உங்களுக்கு புது ப்ரொஜெக்ட்டுகள் கிடைப்பதில் சிக்கல்கள் எழலாம்.
உங்களது பயணம் சில சங்கடங்களை உங்களுக்க தரக்கூடும். நீங்கள் சுப காரியமாக பயணிக்க எண்ணினாலும் உங்களது செலவுகள் அதிகரிக்கும். அதனால் உங்களால் உங்களது குடும்பத்தினரோடு அல்லது நண்பர்களோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியாமல் அவதிப் படுவீர்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் வெளி நாட்டில் வேலை செய்பவராக இருந்தால் விசா குறித்து சில பிரச்சனைகள் எழலாம். அதனால் நீங்கள் உங்களது தாய் நாட்டிற்கு திரும்ப நேரலாம். கிறீன் கார்டு பெறுவது மற்றும் நிரந்தர குடியுரிமை பெறுவது உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் வெளி நாட்டிற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றால், அது உங்களது ஜென்ம ஜாதகம் பலமாக இருந்தால் மட்டுமே நடக்கும். மேலும் உங்களது ஜோதிடரிடம் இருந்து நீங்கள் ஆலோசனை பெற்று அதன் படி நடக்கலாம்.
Prev Topic
Next Topic