![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வேலை மற்றும் உத்யோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வேலை மற்றும் உத்யோகம் |
வேலை மற்றும் உத்யோகம்
கடந்த ஒரு வருடமாக நீங்கள் உங்களது உத்யோகத்தில் பல வெற்றிகளை கண்டிருப்பீர்கள். மேலும் நல்ல வளர்ச்சியும் அடைந்திருப்பீர்கள். மே 2017 முதல் உங்களுக்கு ஒரு வெற்றி நிறைந்த காலமாக இருந்திருக்கும். எனினும், வரும் செப்டம்பர் 11, 2017 அன்று குரு உங்களது 8ஆம் வீட்டிற்கு பெயருவதால், நீங்கள் உங்களது உத்யோகத்தில் நிறைய சங்கடங்களை சந்திக்க நேரலாம். மேலும் சனி உங்களது ராசியில் 12ஆம் வீட்டிற்கு பெயருவதால் பல ஏமாற்றங்களையும் நீங்கள் சந்திக்க நேரலாம்.
மேலும் நீங்கள் உங்களது சொந்த அல்லது குடும்ப பிரச்சனைகளில் சிக்கி கொண்டு அதை சமாளிக்க அதிகம் போராடுவீர்கள். உங்களது வேலையில் ஆர்வத்தை இழப்பீர்கள். மேலும் வேலையின் அழுத்தம் அதிகரிக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நேரத்திற்கு முடிக்க முடியாமல் தவிப்பீர்கள். நீங்கள் உண்மையான மற்றும் தக்க காரணம் கூறினாலும் உங்களது மேலாளர் அதை ஏற்று கொள்ள மாட்டார். இது அலுவலகத்தில் உங்களது செல்வாக்கையம் மற்றும் பேரையும் பாதிக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது இந்த சூழ்நிலையை அவர்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு அவர்கள் வளர நினைப்பார்கள். மேலும் உங்களுக்கு அலுவலகத்தில் மறைமுக எதிரிகள் அதிகம் தோன்றுவார்கள். கடந்த ஒரு வருடமாக நீங்கள் பெற்று வந்த வளர்ச்சியை கண்டு அலுவலகத்தில் இருப்பவர்கள் பொறாமை படுவார்கள். இதனால் அவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். முக்கியமாக நீங்கள் பெண்களை தூரத்தில் வைப்பது நல்லது.
அலுவலகமாகட்டும் அல்லது குடும்பமாகட்டும் பெண்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது. அது உங்களது பிரச்னைகளை குறைக்கும். நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்களது மேலாளர் அல்லது உயர் அதிகாரிகள் உங்களுக்கு பிரச்சனை தரக் கூடும். ஆணோ பெண்ணோ, புதிதாக நட்பு வளர்த்து கொள்வதை தவிர்க்கவும். அது உங்களது செல்வாக்கை குறைக்கலாம். உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் அலுவலகத்தில் அவமானப் படவும் நேரலாம். உங்களை அலுவலகத்தில் இருப்பவர்கள் அதிக சித்திரவதைக்கு உள்ளாக்கலாம். எனினும் நீங்கள் அதிக பொறுமையோடு இருப்பது நல்லது.
நீங்கள் உங்களது உயர் அதிகாரி அல்லது மேலாளரிடம் புகார் கூறினாலும் அது உங்களுக்கு எதிராகவே திரும்பும். அதனால் பிரச்சனைகளும் அதிகரிக்கும். அவசர பட்டு முடிவெடுப்பது நீங்கள் உத்யோகத்தையும் இலக்க நேரிடும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றை எதிர் பார்ப்பதற்கு இது ஏற்ற காலம் இல்லை. அதனால் இருப்பதை வைத்து பொறுமையோடு சமாளிப்பதே அடுத்த ஒரு வருடத்துக்கு நல்லது.
Prev Topic
Next Topic