![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் வேற்று வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | தொழில் மற்றும் வேற்று வருமானம் |
தொழில் மற்றும் வேற்று வருமானம்
ஏழரை சனியாலும் மற்றும் கடந்த 12 மாதங்களாக குரு சரியான நிலையில் இல்லாததாலும் தொழிலதிபர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் பல சங்கடங்களை கண்டிருக்க கூடும். உங்களது பண வரத்தும் அதிகம் பாத்திருந்திருக்க கூடும். மேலும் நீங்கள் கடன்களை கட்ட / சமாளிக்க அதிகம் போராடி இருந்திருப்பீர்கள். எனினும் தற்போது நிகழும் குரு பெயர்ச்சியால் குரு உங்களது லாப ஸ்தானத்தில் வரவுள்ளார். இதனால் உங்களுக்கு பல நன்மைகள் நிகழ உள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு நீங்கள் உங்களது தொழில் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். நீங்கள் உங்களது போட்டியாளர்களை எதிர்த்து முன்னேறி வருவீர்கள்.
மேலும் உங்களுக்கு புது மற்றும் பெரிய வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல ப்ரொஜெக்ட்டுகள் கிடைக்கும். இது உங்களது பண வரத்தை அதிகரிக்கும். இதனால் நீங்கள் உங்களது நிதி ப்ரிச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். நீங்கள் மேலும் நிறைய ஆட்களை வேலைக்கு எடுத்து உங்களது தொழிலை விரிவு படுத்துவார்கள். எனினும் உங்களுக்கு தற்போது ஏழரை சனி நடைபெறுவதால் நீங்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது நன்மையை தரும். ஏனென்றால் சனி உங்களது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் ப்ரொஜெக்ட்டுகளை சரியான நேரத்தில் செய்யவதற்கு அதிக அழுத்தத்துடன் வேலை பார்க்க வேண்டியதிருக்கும்.
நீங்கள் வங்கி கடனுக்கு முயற்சிக்குறீர்கள் என்றால் அது உங்களுக்கு எளிதாக ஒப்புதல் பெரும். உங்களுக்கு தேவையான நிதி உதவி கிடைக்கும். மேலும் புது முதலீட்டாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எனினும் ஜென்ம சனி இருப்பதால் நீங்கள் உங்களது மனைவி / கணவன் பெயரை சேர்த்து தொழில் செய்யவது நல்ல வளர்ச்சியை கொடுக்கும். நவம்பர் 2018 மேல் நீங்கள் அதிக வளர்ச்சியையும் வெற்றியையும் காணலாம்.
சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகளுக்கு இந்த பெயர்ச்சி காலம் நன்றாக உள்ளது. உங்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். மேலும் தக்க சன்மானமும் கிடைக்கும். உங்களது பேரும் புகழும் உயரும். குருவின் பலத்தால் நீங்கள் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic