குரு பெயர்ச்சி (2017 - 2018) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


சனி உங்களது 12ஆம் வீட்டிலும் குரு உங்களது 10ஆம் வீட்டிலும் இருந்து உங்களது குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தி இருக்க கூடும். உங்கள் மனைவி / கணவனுடன் மற்றும் குழந்தைகளிடம் பல சண்டை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்க கூடும். மேலும் உங்களது கணவன்/ மனைவி வீட்டாரிடம் சில மன குழப்பத்தில் இருந்துருப்பீர்கள்.
குரு உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் களத்ர ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு அடுத்த 12 மாதங்கள் நன்றாக உள்ளது. நீங்கள் உங்களது மனைவி/கணவனுடனும் அவர்களது குடும்பத்தினருடன் நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். மேலும் அவர்களுக்காக அதிக நேரம் செலவழித்து மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்க்க முயல்வீர்கள். உங்களது குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவார்கள். உங்களது குழந்தைகள் உங்களது பேச்சை கேட்பார்கள். மேலும் அவர்களது படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். உங்களது குடும்ப உறுப்பினர்கள் நல்ல உடல் நலத்தில் இருப்பார்கள். இது உங்களுக்கு மன நிம்மதியை தரும்.


உங்களது குடும்பத்தில் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர்களுடன் ஏதேனும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளீர்கள் என்றால் அது தற்போது உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் நீங்கள் உங்களது உறவினர்களிடம் இருந்து பிரிந்து இருக்கிறீர்கள் என்றால் தற்போது அவர்களுடன் சேர்ந்து வாழ்வீர்கள். மேலும் உங்களது குடும்பத்தில் சுப காரியம் செய்வதற்கு இது நல்ல காலகட்டமாகும். நீங்கள் சமுதாயத்தில் பெரும் நன்மதிப்பும் பெறுவீர்கள். உங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு சந்தோசமாக செலவிடுவார்கள்.



Prev Topic

Next Topic