குரு பெயர்ச்சி (2017 - 2018) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

Sep 11, 2017 to Oct 25, 2017 நல்ல பலன்கள் (70 / 100)


குரு பெயர்ச்சியின் இந்த முதலாம் பாக காலகட்டத்தில் உங்களுக்கு பல நல்ல அதிர்ஷ்டம் மிக்க பலன்கள் கிடைக்க உள்ளது. குரு, சனி, ராகு போன்ற கிரகங்கள் உங்களது ராசியில் நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஏழரை சனி நடந்தாலும் அதனால் எந்த ஒரு பின்னடைவுகளும் உங்களுக்கு இருக்காது. இந்த காலகட்டத்தை பயன் படுத்திகொண்டு நீங்கள் ஏதேனும் முக்கியமான விசயங்கள் மற்றும் சுப காரியங்கள் செய்யவிருந்தால் அதனை முழு முயற்சியோடு செய்யலாம். எனினும் அக்டோபர் 25, 2017 முதல் ஜென்ம சனி தொடங்க உள்ளத்தால் இந்த பலன்கள் அதற்க்கு பின் மாறத் தொடங்கும்.
இது வரை ஏதேனும் உடல் உபாதைகளால் நீங்கள் அவதி பட்டிருந்தால் அது குணமடையும். நீங்கள் முழுமையாக உங்களது உடல் நல பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். மேலும் கடந்த சில மாதங்களாகவே உங்களுக்கு குடும்பத்தினர் மற்றும் பிற உறவினர்களுக்கிடையே இருந்து வந்த சிக்கல்கள் அல்லது பிரச்சனைகள் குறையத் தொடங்கும். நீங்கள் குடும்பத்தினர்களிடம் இருந்து பிரிந்து இருந்திருந்தால் அந்த சூழல் தற்போது மாறும். திருமணம் ஆகாத மகன் அல்லது மகள் இருந்தால், அவர்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும். மேலும் உங்களது குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். அது உங்களை பெருமிதம் கொள்ள வைக்கும்.


திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியோடும் அன்யுநியத்தோடும் இருப்பார்கள். மேலும் உங்களது ஜென்ம ஜாதகம் உங்களுக்கு சாதகமாக இருந்தாள் குழந்தை பிறக்கும் பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும். எனினும் IVF அல்லது IUI மூல்வமாக குழந்தைக்கு முயற்சித்தால் அது உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். திருமணம் ஆகாதவர்கள் காதல் வயப்பட கூடும். நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால், அதனை வெளி படுத்த இது ஏற்ற காலமாகும்.
நீங்கள் புதிதாக வேலைக்காக முயர்ச்சிகுரீர்கள் என்றால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக் இது ஏற்ற காலம். எனினும் ஜென்ம சனியின் காரணமாக உங்களது வளர்ச்சி குறைவாகவே இருக்கும். தொழிலதிபர்களுக்கு அமோகமான பலன்களை எதிர் பார்க்கலாம். நீங்கள் ஆச்சரியத்தக்க அள்ளவில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நட்டம் அல்லது பின்னடைவுகளில் இருந்து வெளி வருவீர்கள்.


நீங்கள் மறு நிதியாக்கம் வாயிலாக உங்களது கடன் சுமைகளை குறைக்கலாம். இதனால் வட்டி விகிதமும் குறையும். மேலும் உங்களது தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் வங்கி கடனுக்கு முயச்சிக்கலாம். அது எளிதாக ஒப்புதல் பெரும். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளீர்கள் என்றால் அது உங்களுக்கு ஓரளவிர்க்காவது சாதகமாக இருக்கும். எனினும் ஜென்ம சனி நடைபெறுவதால் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது.

Prev Topic

Next Topic