![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) உடல் நலம் / ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
மன அழுத்தம் மற்றும் குறைவான தூக்கத்தின் காரணமாக உங்களது உடல் நலம் சற்று குன்றி இருக்கும். மேலும் ராகு உங்களது 9ஆம் வீட்டில் இருந்து கடந்த ஒரு வருடமாக உங்களது உடல் நலத்தை தேவை இல்லாமல் பாதித்திருந்திருப்பார். சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அதற்க்கு நீங்கள் அதிகம் செலவு செய்திருந்திருப்பீர்கள். எனினும் குரு தற்போது உங்களது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் கடந்த ஒரு வருடமாக நீங்கள் அனுபவித்து வந்த உடல் நல பிரச்சனைகளில் இருந்து தற்போது ஒரு நல்ல தீர்வு காண்பீர்கள்.
வரும் அக்டோபர் 25, 2017 அன்று உங்களது ஜென்ம சனி தொடங்கவிருக்கிறது. இது உங்களுக்கு உடல் உபாதைகளையும் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். எனினும் குரு உங்களது மன அழுத்தத்தை குறைத்து உங்களுக்கு தக்க மருந்து / மருத்துவம் கிடைக்க பெற்று விரைவில் குணமடைய செய்வார். குருவின் பலத்தால் அனைத்தும் நலமோடும் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கலாம். மேலும் ராகு உங்களது 8ஆம் வீட்டில் இருப்பதால் அவர் உங்களது பிரச்சனைகளின் வீரியத்தை குறைப்பார்.
எனினும் நீங்கள் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்ய வேண்டியதிருந்தால் அதை வரும் அக்டோபர் 25, 2017 முன் செய்வது உத்தமம். இல்லை என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செய்வது நல்லது. மேலும் நீங்கள் ஏற்க்கனவே அறுவை சிகிச்சை செய்துகொண்டுளீர்கள் என்றால் குருவின் அருளால் விரைவாக குணமடைவீர்கள். எனினும் கடவுள் பிராத்தனை மற்றும் த்யானம் செய்வது உங்களுக்கு மன நிம்மதியை தருவதோடு விரைவாக குணமடையவும் உதவும். ஹனுமன் சாலிசா மற்றும் லலிதா சஹஸ்ர நாமம் கேட்பது நல்ல பலனை தரும்.
Prev Topic
Next Topic