![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த ஒரு ஆண்டாக குரு உங்களது 10ஆம் வீட்டில் இருந்து உங்களது உத்தியோகத்திலும் நிதி நிலையிலும் பல பின்னடைவுகளை ஏற்படுத்தி இருக்க கூடும். மேலும் ஏழரை சனி கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் 2017 உங்களை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்க கூடும். ஆனால் தற்போது குரு உங்களது 11ஆம் வீடான லாப ஸ்தானத்த்தில் சஞ்சரிக்க உள்ளார். இது உங்களது உத்தோயோகத்தில் ஒரு முன்னேற்றத்தை காண உதவும். மேலும் இதனால் நீங்கள் பல வெற்றிகளையும் லாபத்தையும் காண்பீர்கள். எனினும் ராகு உங்களது 8ஆம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு நிகழவிருக்கும் பிரச்சனைகளின் தாக்கத்தை 9ஆம் வீட்டில் இருந்ததை விட ஓரளவுக்கு குறைந்தே காணப் படும்.
குரு உங்களுக்கு நல்ல நிலையில் இருந்தாலும் ஏழரை சனியின் வீரியம் அதிகரிக்க கூடும். சனி தற்போது உங்களது ஜென்ம ராசிக்கு வரும் அக்டோபர் 25, 2017 பெயர்ச்சியாக உள்ளார். சனி பகவான் உங்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தினாலும், குரு அவற்றை சரி செய்ய உதவுவார். மேலும் உங்களது ஜென்ம ஜாதகம் மற்றும் மகா தசை பலமாக இருந்தால் அடுத்த ஒரு வருடத்திற்க்கு உங்களது குடும்பம், உத்யோகம் மற்றும் வருமானம் சீராக இருக்கும். ஒருவேளை உங்களது மகா தசை அல்லது ஜென்ம ஜாதகம் சற்று சரியாக இல்லை என்றால் உங்களுக்கு ஒரு கலவையான பலன்கள் கிடைக்கும். எனினும் எந்த ஒரு விடயமும் உங்களது கட்டுப்பாட்டை மீறி செல்லும் போது குரு பகவான் உங்களுக்கு உதவுவார். மேலும் சூழலை சரி செய்து பழைய நிலைக்கு கொண்டு வர உதவுவார்.
Prev Topic
Next Topic