குரு பெயர்ச்சி (2017 - 2018) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

Oct 25, 2017 to Mar 09, 2018 கலவையான பலன்கள் (50/100)


குரு பகவான் உங்களது லாப ஸ்தானத்திலும் சனி பகவான் உங்களது ஜென்ம ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு ஒரு கலவையான பலன்கள் கிடைக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் குறிகிய கால ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு வெற்றியை தரும். நீங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் பலன் தரும். எனினும் நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
ஜென்ம சனி உங்களது ராசிக்கு தொடங்க இருப்பதால் சில உடல் உபாதைகள் வரக் கூடும். எனினும் குருவின் பலத்தால் அதில் இருந்து நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். மேலும் இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு நிகழும் சிக்கல்கள் அல்லது பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விரைவாக வெளி வருவீர்கள். குருவின் பலத்தால் நீங்கள் உங்களது குழந்தைகள், மற்றும் பெற்றோர்களிடம் நல்ல மகிழ்ச்சியான உறவு நிலையில் இருப்பீர்கள். எனினும் திருமணம் ஆனவர்களுக்கு உங்களது மனைவி / கணவன் மற்றும் அவர்களுடைய உறவினர்களை சமாளிப்பது ஒரு சவால் தான். இருப்பினும் குருவின் பலத்தால் அனைத்தும் உங்களது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
நீங்கள உங்களது அலுவலக பணியை முடிப்பதற்கு அதிக நேரம் உழைக்க வேண்டியதிருக்கும். அலுவலகத்தில் நிகழும் பிரச்சனைகளையும் அரசியலையும் நீங்கள் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மேலும் உங்களது கடின உழைப்பிற்கான சன்மானம் உங்களுக்க் நிச்சயம் கிடைக்கும்.


தொழிலதிபர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியின் இரண்டாம் பாக காலகட்டம் ஒரு எச்சரிக்கை மிகுந்ததாக இருக்கும். உங்களது மகா தசை உங்களுக்கு சாதகமாக இல்லை என்றால் உங்களது மனைவி அல்லது கணவன் அல்லது குடும்பத்தினர் பெயரை தொழில் இணைத்து கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும். குறிகிய கால ப்ரோஜெக்டுகளை எளிதில் முடிப்பீர்கள். 6 முதல் 9 மாதகல் உள்ள ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு லாபகரமானதாகவும் எளிதில் முடிக்க கூடியதாகவும் இருக்கும்.
உங்களது நிதி நிலை பொறுத்தவரையில் நேரம் நன்றாகவே உள்ளது. உங்களுக்கு வருமானம் மற்றும் செலவுகள் இரண்டும் அதிகரித்து கொண்டே இருக்கும். எனினும் முடிந்த அளவில் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு பங்கு சந்தை முதலீடு லாபகரமாக இருக்கும். திரை துறையில் இருப்பவர்களுக்கு பல வைப்புகள் கிடைக்கும். மேலும் உங்களுக்கு நல்ல சன்மானமும் பேரும் புகழும் கிடைக்கும். அதனால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.



Prev Topic

Next Topic