குரு பெயர்ச்சி (2017 - 2018) வர்த்தகம் மற்றும் முதலீடு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


பங்கு சந்தையில் முதலீடு செய்யவதற்கு இது ஏற்ற காலமாகும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சில அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். உங்களது பங்கு நட்டத்தில் இருந்து மீண்டு லாபகரமாக மாறும். நீங்கள் குருவின் பலத்தால் எதிர் பார்த்த லாபத்தை பெறுவீர்கள். எனினும் ஜென்ம சனியும் நிகழுவதால் நாள் வர்த்தகம் அல்லது ஊக வர்த்தகம் செய்யவதற்கு இது ஏற்ற காலம் இல்லை. சனி குருவால் கிடைத்த அதிர்ஷ்டத்தை குறைக்க நேரலாம். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால், சற்று சிந்தித்து செயல் படுவது உத்தமம்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்பார்க்கலாம். அவர்கள் முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலமாகும். எனினும் நீங்கள் நாள் வர்த்தகம் செய்யவதை தவிர்ப்பது நட்டத்தில் இருந்து விடுபட உதவும். நீங்கள் உங்களது முதலீட்டை பத்திரம் போன்றவற்றில் செலுத்துவது நல்லது. சூது, அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றில் பணம் செலவழிப்பதை தவிர்ப்பது நல்லது. ஜென்ம சனி உங்களுக்கு பண விரயத்தை அதிகரிப்பார் .


சொத்துக்கள் வாங்குவது அல்லது முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. அப்படி செய்யதால் நீங்கள் ஏமாற்ற பட கூடும். எனினும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செய்வது நல்லது.


Prev Topic

Next Topic