குரு பெயர்ச்சி (2017 - 2018) வேலை மற்றும் உத்யோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

வேலை மற்றும் உத்யோகம்


கடந்த ஒரு வருடம் உங்களது உத்யோகத்தில் நீங்கள் ஒரு கசப்பான அனுபவத்தையே கண்டிருப்பீர்கள். அது உங்களுக்கு சில பின்னடைவுகளை தந்திருக்கும். மேலும் கடந்த பெப்ரவரி முதல் ஆகஸ்ட் 2017 வரை நீங்கள் இடைவிடாத பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். மேலும் உங்களது அலுவலகத்தில் தேவை இல்லாத மாற்றம் மற்றும் தாழ்வுகளை சந்தித்து வந்திருப்பீர்கள்.
எனினும் தற்போது நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியில் குரு உங்களது 11ஆம் வீட்டிற்கு வருவதால் உங்களுக்கு பல அதிர்ஷ்டங்களை தரவிருக்கிறார். நீங்கள் உங்களது உத்யோகத்தில் கடின உழைப்பாலும் திறமையாலும் மேல் நோக்கி செல்வீர்கள். நீங்கள் வேலை தேடுகுறீர்கள் என்றால் அல்லது வேலையில் மாற்றம் ஏதேனும் எதிர் பார்க்குறீர்கள் என்றால், அது உங்களுக்கு வரும் அக்டோபர் 25, 2017 முதல் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனிமும் நீங்கள் கிடைத்த சம்பளத்திற்கு அதை ஏற்று கொள்ள வேண்டும். மேலும் ஜென்ம சனி நீங்கள் ஓரளவிற்காயினும் நல்லபடியாக வேலை பார்க்க உதவுவார். நீங்கள் உங்களது கல்வி தகுதிக்கு ஏற்ற வேலையை எதிர் பார்க்கலாம். உங்களது அலுவலகத்தில் தேவை அற்ற அரசியல் மற்றும் பிரச்சனைகள் எழுந்தாலும் உங்களது மேலாளர், முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மேலும் நீங்கள் நீண்ட காலம் எதிர் பார்த்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.


சனி மற்றும்உ கேதுவின் சஞ்சாரத்தால் உங்களது வேலை சுமை அதிகரிக்கும். எனினும் குரு உங்களது 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் நிச்சயம் கிடைக்க உதவுவார். மேலும் அரசு ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல காலகட்டமாகும். தற்போதைய குரு பெயர்ச்சி நீங்கள் எதிர் பார்த்த இடமாற்றம் மற்றும் வேலை கிடைக்க அருள் புரிவார்.


Prev Topic

Next Topic