![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் வேற்று வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | தொழில் மற்றும் வேற்று வருமானம் |
தொழில் மற்றும் வேற்று வருமானம்
குரு உங்களது 11ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2017 நல்ல பலன்களை தந்திருப்பார். எனினும் தற்போது குரு உங்களது 12ஆம் வீட்டிற்கு பெயர்வதால் அது நல்ல செய்தியாக இருக்காது. உங்களது நிதி நிலையையும் மற்றும் நிதி தேவையையும் சமாளிக்க நீங்கள் அதிகம் போராடுவீர்கள். நீங்கள் எடுத்துள்ள ப்ரொஜெக்ட்டின் செலவு எதிர் பார்த்ததை விட அதிகமாகும். இதனால் நிதி பற்றா குறை ஏற்படலாம். நீங்கள் புதிதாக ஏதேனும் ப்ராஜெக்ட் அல்லது ஒப்பந்தம் செய்ய உள்ளீர்கள் என்றால், அது குறித்து அணைத்து ஆவணங்களையும் சரியாக படித்து புரிந்து கொண்டு பின் கையெழுத்து போட வேண்டும்.
உங்களிடம் இது நாள் வரை வேலை பார்த்த நல்ல ஊழியர்கள் வேலையை விட்டு நிற்க கூடும். இதனால் நீங்கள் ப்ரொஜெக்ட்டை சரியான நேரத்தில் முடித்து கொடுக்க முடியாமல் திணறுவீர்கள். உங்களது தொழில் சார்ந்த பயணம் வெற்றிகரமாக இருக்காது. மேலும் நீங்கள் உங்களது முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி எதிர் பார்த்தால் அது எதிர் பார்த்த படி கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். அதனால் நீங்கள் வங்கி அல்லது வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்க நேரலாம். உங்களது பணம்/ நிதி தேவையை சமாளிக்க நீங்கள் அதிகம் போராட வேண்டியதிருக்கும்.
இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் நீங்கள் புதிதாக தொழில் தொடங்குவது அல்லது உங்களது தொழிலை மேம் படுத்துவது தக்க யோசனையாக இருக்காது. எனினும் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி முயற்சிப்பது உத்தமம். நீங்கள் வருமான வரி சம்பந்தமாக சில பிரச்சனைகளையும் எதிர் கொள்ள நேரலாம்.
சுய தொழில் புரிவோர்,ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் சற்று கடினமான காலத்தை கடக்க வேண்டும். உங்களது பேரையும் செல்வாக்கையும் நீங்கள் நிலை நாட்டினாலும் வருமானம் சற்று குறைந்தே இருக்கும்.
Prev Topic
Next Topic