![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | முதல் பாகம் |
Sep 11, 2017 to Oct 25, 2017 சோதனை காலம் (35 / 100)
கடந்த சில மாதங்களாக உங்களுக்கு கிடைத்த ஆறுதல் நிறைந்த காலம் தற்போது மாற உள்ளது. குரு உங்களது ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயருவதால் நீங்கள் தற்போது சில சோதனைகளை சந்திக்க நேரலாம். மேலும் ஜென்ம சனியால் நீங்கள் அதிக இன்னலுக்கு ஆளாகலாம். உங்களது உடல் ஆரோக்கியம் பாதிக்க படலாம். அதனால் நீங்கள் சரியான மருத்துவ உதவி நாடுவீர்கள். தேவையற்ற பயமும் பதற்றமும் தோன்றும். உங்களது மனைவி / கணவன், மற்றும் அவருடைய உறவினர்கள் மற்றும் உங்களது குழந்தைகளுக்கு மத்தியில் உள்ள நல்லுறவு பாதிக்க கூடும். நீங்கள் மிக கவனமாக இல்லை என்றால் உங்களது மனைவி / கணவனை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழலும் எழலாம். மேலும் நீங்கள் வழக்கு எதிலேனும் இருக்கின்றீர்கள் என்றால் அதனால் வரும் தீர்ப்பு உங்களை மிகவும் பாதிக்க கூடும்.
எந்த ஒரு காரணமும் இன்றி நீங்கள் உங்களது வேலையை இழக்க கூடும். மேலும் உங்களது தவறும் எதுவும் இறக்காது. எனினும் இது உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது. அதனால் அதை எண்ணி பயம் கொள்ள வேண்டாம். மேலும் உங்களது முதலாளி அல்லது மேலாளரிடம் உங்களது பதவி உயர்வை பற்றி எதுவும் இந்த காலகட்டத்தில் பேச வேண்டாம். வேலை சுமையை முடிந்த அளவிற்கு சமாளிக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், குரு பெயர்ச்சியின் இந்த முதல் பாகமான 6 வாரத்திற்கு உங்களுக்கு அதிக அழுத்தம் அலுவலகத்தில் ஏற்படும். எனினும் நவம்பர்2017ற்கு மேல் மெதுவாக குறையும். தொழிலதிபர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிர் பாராத பிண்னடைவுகள் ஏற்படலாம்.
உங்களது சேமிப்பு மிக வேகமாக குறைய வாய்ப்புள்ளது. உங்களது செலவுகள் அதிகரிக்கும். பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு நட்டத்தை கொடுக்கும். அதனால் அடுத்த 6 வாரங்களுக்கு எந்த முதலீடும் பங்கு சந்தையில் போட வேண்டாம்.
KT ஜோதிடரின் பிடித்த மேற்கோள்: பங்கு சந்தையில் நீங்கள் ஷேர் வாங்கினாலும் அல்லது விற்றாலும், அதன் விளைவு உங்களுக்கு பாதகமாகவே இருக்கும். கோள்களின் சக்தியை மீறி வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை
Prev Topic
Next Topic