![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | நான்காம் பாகம் |
Jul 10, 2018 to Oct 11, 2018 சுப காரியம் (65 / 100)
12ஆம் வீட்டில் குரு பலம் பெறுவதால் நீங்கள் அதிக அளவில் குடும்பத்தில் நடக்கும் சுப காரியங்களில் மும்மரமாக இருப்பீர்கள். இதனால் தூக்கம் குறைவாக இருக்கும், நீங்கள் சுப காரியங்கள் செய்வதற்காக அதிக அளவில் பொறுப்பு ஏற்று கொண்டு சமாளிக்க முயல்வீர்கள். புது வீடிற்கு குடி பெயர்வதற்கும் புது மனை விழ நடத்துவதர்க்கும் இது ஏற்ற காலமாகும். மேலும் நீங்கள் உங்கள் வீட்டில் மகன் அல்லது மகளுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டமாகும். இருந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே நீங்கள் செலவு செய்ய கூடும். செலவுகளை உங்களால் கட்டுபடுத்த முடியாது. இருப்பினும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் உங்களது செலவுகளை நீங்கள் திட்டமிடலாம். இதனால் நிதி பற்றா குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
குடும்பத்தினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சில சிறு சிறு வாக்குவாதங்கள் நடந்தாலும் அதனை கடந்து அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். குழந்தை பிறப்பதால் குடும்பத்தில் மேலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் குடும்பத்தினறோடு உல்லாச பயணம் செல்ல திட்டமிடலாம். அது உங்களை பெரிய அளவில் மகிழ்விக்கும்.
உங்களது மகா தசை உங்களுக்கு சாதகமாக இருந்தால் நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் காதல் வயப் பட கூடும். மேலும் உங்களது பெற்றோர்களும் உங்களது விருப்பத்திற்கு ஒப்புதல் தருவார்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல மதிப்பும் பெயரும் பெரும்.
உங்களது அலுவலகத்தில் நீங்கள மிக கவனமாக இருக்க வேண்டும். உங்களது ப்ரோஜெக்ட்டை தக்க சமயத்தில் முடிக்க முடியாமல் நீங்கள் திணரக் கூடும். எனினும் குரு மற்றும் கேது உங்களது ராசியில் நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் நீங்கள் தொடர்ந்து இருப்பீர்கள். அதில் எந்த ஒரு பாதிப்பும் வராது. ஆனால் அது எதிர் காலத்தில் உங்களது வளர்ச்சியை பாதிக்க கூடும். அதனால் கவனத்தோடு வேலை பார்ப்பது முக்கியம்.
தொழிலதிபர்களுக்கு தொடர்ந்து ஒரு சோர்வான காலகட்டமே நிலவும். இதனால் நீங்கள் அதிகளவில் மன வருத்ததோடு காணப் படுவீர்கள். உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது ஓரளவிற்க்கு அனுகூலமாக இருக்கும். இது உங்களது தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கும் உதவும்.
உங்களது பண தேவைகளை சமாளிக்க நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களது வருமானம் அளவாகவே இருப்பதால் நீங்கள் கடன் வாங்கினாலும் அதனை திருப்பி கொடுக்க முடியுமா என்று பார்க்க வேண்டியதுள்ளது. தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. நீங்கள் புது வீடு வாங்க முயற்சித்தாலும் அது உங்களுக்கு அனுகூலமாக இருந்தாலும் நீங்கள் அதிக விலை கொடுத்தே வாங்குவீர்கள். பங்கு சந்தை முதலீட்டில் இருந்து விலகி இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic