![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) உடல் நலம் / ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
கடந்த ஒரு வருடமாக ஜென்ம சனியால், நீங்கள் பதற்றம், மன அழுத்தம், மற்றும் மன அளவில் சோர்ந்து காணப்பட்டிருப்பீர்கள். உங்களது உடல் நலமும் சற்று பாதிக்க பட்டிருக்கும். எனினும் குரு உங்களுக்கு தகுந்த வைத்தியமும் மருந்தும் கிடைக்க உதவி இருந்திப்பார். வரவிருக்கும்மு குரு பெயர்ச்சியின் முதல் இரண்டு மாதங்களான செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2017 உங்களுக்கு சவாலான மாதங்களாகவே இருக்கும். உங்களக்கு சில உடல் நல கோளாறு ஏற்படலாம். எனினும் நவம்பர் 2017 சனி பகவான் உங்களது 2ஆம் வீட்டிற்கு வருவதால் உங்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலாக இருக்கும். உங்களுக்கு தக்க வைத்தியம் கிடைக்க அவர் உதவுவார், மேலும் கேது 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களது ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் உங்களது உணவில் சிறிது கவனத்தோடு இருப்பது அதிக உடல் எடை கூடுவது மற்றும் வேறு சில பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்க உதவும். முக்கியகமாக விசேட வீடுகள் மற்றும் விழாக்களில் பங்கு பெரும் போது சற்று உங்களது உணவில் கவனம் வைத்து கொள்வது நல்லது.
உங்களது உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள நீங்கள் அதிக உடற் பயிற்சி செய்யவது முக்கியம். மேலும் நீங்கள் புரத சத்து மற்றும் நார் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது உங்களது உடல் சோர்வை குறைக்க உதவும்.
நீங்கள் தீய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து வெளி வருவீர்கள். மேலும் உங்களுக்கு கெட்ட பழக்கம் ஏதேனும் இருந்தால் சனி, குரு மற்றும் கேதுவின் பலத்தால் அதில் இருந்து விடு படுவீர்கள். இந்த குரு பெயர்ச்சி காலக்கட்டத்தில் உங்களது உடல் நலத்தை பற்றி அதிகம் கவலை பட வேண்டாம். ஹனுமன் சாலிசா மற்றும் ஆதித்ய ஹ்ரிதயம் கேட்டு வருவது நீங்கள் நலமோடு இருக்க உதவும்.
Prev Topic
Next Topic