குரு பெயர்ச்சி (2017 - 2018) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

காதல்


குரு உங்களது 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் விரும்புபவருடன் திரை படத்திற்கு செல்வது, பயணம் செல்வது,மற்றும் உணவு விடுதிக்கு செல்வது என்ற அதிக நேரம் செலவிடுவீர்கள். எனினும் காதலுக்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. நீங்கள் உங்களது உத்யோகம் மற்றும் நிதி நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விரும்புவரிடம் அதிக வாக்குவாதம் மற்றும் சண்டையில் ஈடுபட நேரிடலாம். மேலும் உங்களது விருப்பத்தை கூறுவதற்க்கோ அல்லது மற்றவர் விருப்பத்தை ஏற்பதற்க்கோ இது தக்க தருணம் இல்லை.
திருமணம் ஆனவர்களுக்கு இடையில் புரிதல் குறைவாக இருக்கும். உங்களது கணவன்/மனைவிக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கலாம். இது உங்கள் இருவரையும் தற்காலிகமாக பிரிக்க கூடும். இது உங்களது திருமண வாழ்க்கையை பாதிக்கலாம். நீங்கள் புதிதாக திருமணம் ஆனவராக இருந்தால், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2017 அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். எனினும் நவம்பர் 2017 உங்களது உறவு நல்ல நிலைக்கு வரும். அதன் பின் நீங்கள் குழந்தை பேருக்கு முயற்சிக்கலாம். எனினும் IVF அல்லது IUI உங்களுக்கு ஏற்ற பலனை தராது. நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் வரன் தேடவும் திருமணம் முடிக்கவும் இது ஏற்ற காலமாகும்.




Prev Topic

Next Topic