குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


கடந்த சில மாதங்கள் உங்களுக்கு குரு 11ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் பல வெற்றிகளும் நல்ல ஒரு முன்னேற்றத்தையும் கண்டிருந்துருப்பீர்கள். இது உங்களுக்கு சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் தந்திருக்கும். எனிமும் இப்பொழுது வரவிருக்கும் பெயர்ச்சியில், குரு 12ஆம் வீட்டிற்கு பெயர்ந்து விரய ஸ்தானத்தில் இருக்க உள்ளார். இது உங்களுக்கு பயணம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது, தங்க நகைகள் வாங்குவது போன்ற தேவையற்ற அல்லது அதிக செலவுகளை ஏற்படுத்தக் கூடும்.


மேலும் நீங்கள் வரும் அக்டோபர் 25, 2017 அன்று ஜென்ம சனியில் இருந்து விடுபட உள்ளீர்கள். இது இதுநாள் வரை உங்களுக்கு இருந்த மன அழுத்தம், மன கவலை போன்றவற்றில் இருந்து சற்று நிவாரணம் தரும். மேலும் கேது உங்களது 3ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால், அடுத்த 12 மாதங்களுக்கு உங்களுக்கு பல நல்ல விசயங்களை தரக் கூடும். எனினும் ராகு 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், தேவை அற்ற சில பிரச்சனைகள் வரலாம். சாதாரண பிரச்சனைகளை சமாளிப்பது அல்லது தீர்வு காண்பதுக் கூட உங்களுக்கு கடினமான ஒன்றாகும்.
உங்களது குடும்பத்தில் சுப காரியங்கள் செய்வதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். ஏனினினும் அதனால் வரவிருக்கும் செலவுகள் நீங்கள் எதிர் பார்த்ததை விட அதிகமாக இருக்கும். அதனால் நீங்கள் உங்கள் நிதி நிலையிலும் செலவுகளிலும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். தற்போது நிகழும் குர் பெயர்ச்சி காரணத்தால் உங்களது வாழ்க்கையில்/ உத்யோகத்தில் முன்னேற்றம் சற்று நிதானமாகவே வரும்.



Prev Topic

Next Topic