![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | இரண்டாம் பாகம் |
Oct 25, 2017 to Mar 09, 2018 குறிப்பிடத்தக்க முன்னேற்றம் (60 / 100)
ஜென்ம சனியில் இருந்து நீங்கள் விடப்பட உள்ளீர்கள். நீங்கள் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக பல கடினமான சூழலை கடந்து வந்திருப்பீர்கள். சனி உங்களது ராசியின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். மேலும் கேது மற்றும் சனியின் நிலைபாடுகள் உங்களுக்கு கடந்த காலத்தை விட சற்று சாதகமாகவே உள்ளது. குரு உங்களது ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிதாக எந்த ஒரு பாதிப்பையும் உங்களுக்கு தரமாட்டார். எனினும் உங்களது செலவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்வது நல்லது. உங்களது உடல் நலம் தற்போது தேறி வரும். அதனால் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். உங்களது மன வருத்தமும் குறைய தொடங்கும்.
உங்களது மனைவி / கனவனிடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையத் தொடங்கும். எனினும் சிறு சிறு வாக்குவாதங்கள் எல்லாம், இருந்தாலும் அது உங்களது வாழ்க்கையை பெரிதாக பாதிக்காது. கடந்த சில மாதங்கள் மிக மோசமான சூழலை பார்த்ததற்கு தற்சமயம் உங்களது கணவன் மனைவி உறவு நிலை ஆறுதலாகவே இருக்கும். உங்களது குடும்பதினர்களுக்காக அதிகம் நேரம் செலவிட வேண்டியதிருக்கும். மேலும் உங்களது பொறுப்பும் அதிகரிக்கும். உங்களது குடும்பத்தினர்கள் அல்லது குழந்தைகள் பல விசயங்களை உங்களிடத்தில் வேண்டுவார்கள் அதனால் செலவுகள் அதிகரிக்கும். சுப காரியங்களுக்காகவும் வேறு விசயங்களுக்காகவும் நீங்கள் அதிகம் பயணம் செய்ய நேரலாம். உங்களது உறவினர்களிடத்தில் இருந்து தேவையற்ற புகார்களும் வாக்குவாதங்களும் வரலாம். உங்களது சேமிப்பு மிக விரைவாக குறையக் கூடும். அதனால் பண தேவையை சமாளிக்க நீங்கள் திட்டமிட்டு செயல் பட வேண்டும்.
திருமணம் ஆனவர்கள் குழந்தை பேருக்காக முயற்சிக்க இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் அதற்க்கான முயற்ச்சியில் இடுபடலாம். உங்களுக்கு எதிர் பார்த்த வரன் கிடைப்பதோடு சாதகமான சூழலும் அமையும். வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள், இருப்பினும் சிறு பண நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அணைத்து முக்கிய கிரகங்களும் உங்களது ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியின் இரண்டாம் பாகத்தில் நல்ல நிலையில் இருப்பதால் உங்களது உத்தியோகம் பாதுகாப்பாக இருக்கும், எனினும் வளர்ச்சியை எதிர் பார்க்க முடியாது. வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் இருந்து கொண்டே தான் இருக்கும். எனினும் நீங்கள் அதிக நேரம் வேலை பார்த்து அதனை சமாளிக்க முயர்ச்சிப்பீர்கள். அலுவலகத்தில் பெரிதாக எந்த ஒரு அரசியலும் உங்களை சுற்றி நடக்காது. அதனால் நீங்கள் ஆறுதல் அடையலாம். தொழிலதிபர்கள் ஒரு நல்ல முநேற்றத்தை காண்பார்கள். எனினும் தேவைக்கேற்ற பண வரத்து இருக்காது. முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீடுகள் செய்வதாக இருந்தால் முயற்சிக்கலாம். எனினும் குறுகிய காலத்தில் லாபத்தை எதிர் பார்க்க கூடாது. ஊக வர்த்தகத்தில் இடுபடுவதர்க்கு இது ஏற்ற காலம் இல்லை. ராகு உங்களது ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் சற்று குறைவாகவே இருக்கும்.
Prev Topic
Next Topic