குரு பெயர்ச்சி (2017 - 2018) வர்த்தகம் மற்றும் முதலீடு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


தற்போது நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பெரிதாக சொல்லும் அளவிற்கு பலன்கள் இல்லை. நீங்கள் வர்த்தகம் / பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால் சில நட்டங்களை எதிர் கொள்ள நேரலாம். ராகு உங்களது 9ஆம் வீட்டிலும் மந்த சனியம் உங்களது அதிர்ஷ்டத்தை தடுக்கலாம். நீங்கள் நீண்ட காலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும் தற்போது நீங்கள் செய்யும் எந்த ஒரு முதலீடும் லாபகரமாக இருக்காது. உங்களது சேமிப்பு பெரிதாக பாதிக்க கூடும். ஊக வர்த்தகம் செய்தால் உங்களது நட்டம் அதிகரிக்கலாம். நீங்கள் தவறாக பங்கு சந்தை நிலவரத்தை யூகித்தால் மொத்த பணத்தையும் இழக்க நேரலாம். நீங்கள் எவ்வாறாவது வர்த்தகம் செய்ய வேண்டும் என்றால், உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்வது உத்தமம். முக்கியமாக செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் 2017 வரை எந்த ஒரு வர்த்தகத்திலும் ஈடுபடாமல் இருப்பது உங்களது நிதி நிலையை ஓரளவுக்காவது காப்பாற்ற உதவும்.
உங்களது குடும்பத்தினருடைய வற்புதலால் நீங்கள் வீடு அல்லது வாகனம் வாங்க முயலலாம். அத்தகைய முதலீட்டை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நீங்கள் சந்தையில் உள்ள விலையை விட அதிகம் செலுத்தி வாங்க வேண்டியதிருக்கும். அதனால் தக்க சூழல் வரும் வரை பொறுத்திருந்து செயல் படுவது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic