![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
பயணம் குரு 12ஆம் வீட்டிற்கு பெயர்த்தால் சற்று சிந்திக்க வேண்டிய விடயமாகும். நீங்கள் அதிகம் பயணிக்க நேரிடலாம். முக்கியமாக சிறு சிறு பயணங்கள் அதிகம் மேற்கொள்ள கூடும். இது உங்களது செலவுகளை அதிகரிக்க கூடும். மேலும் உங்களது சேமிப்பையும் கரைக்கும். எனினும் குடும்ப தேவைக்காகவும், வேலை அல்லது தொழில் சம்பந்தமாகவும் நீங்கள் அடிக்கடி பயணம் செய்யக் கூடும். மேலும் தொலை தூர பயணம் ஏதேனும் மேற்கொள்ள முயன்றால் அது உங்களுக்கு சௌகரியமானதாக இருக்காது. இதனால் நீங்கள் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகக் கூடும். அதுமட்டும் இன்றி உங்களது மன அழுத்தமும் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான பயணம் மற்றும் புது ப்ராஜெக்ட் சம்பந்தமான பயணம் வெற்றிகரமாக முடிவதில் சில தாமதம் அல்லது சிக்கல் நேரலாம்.
உங்களது நண்பர்களும் உறவினர்களும் உங்களை வந்து அடிக்கடி சந்திக்கலாம். இதனால் நீங்கள் அவர்களை பொழுதுபோக்கிற்காக வெளிய கூட்டி செல்ல வேண்டியதிருக்கும். இது உங்களது செலவை அதிகரிக்கும். நேரமும் விரயமாகும்.
நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால் உங்களுக்கு விசா சம்பந்தமான சிக்கல்கள் வரக் கூடும்.இதனால் நீங்கள் தாய் நாடு திரும்பக் கூடும். நீங்கள் வெளி நாடு செல்ல நேர்ந்தால், உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து, ஜோதிடரின் ஆலோசனை பெற்று அதன் படி நடந்து கொள்வது உத்தமம்.
Prev Topic
Next Topic