![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வேலை / உத்யோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வேலை / உத்யோகம் |
வேலை / உத்யோகம்
கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்களது உத்யோகத்தில் நல்ல வளர்ச்சியை கண்டிருப்பீர்கள். குரு உங்களது 11ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுத்திருப்பார். முக்கியமாக கடந்த ஜூன் மற்றும் ஜூலை 2017 நீங்கள் நல்ல வளர்ச்சியை கண்டிருப்பீர்கள். எனினும் தற்போது குரு உங்களது 12ஆம் வீட்டிற்கு செல்வதால் உங்களது வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும். உங்களது வேலையின் அழுத்தமும் மற்றும் பதற்றமும் அதிகரிக்கும்.
இந்த குரு பெயர்ச்சியின் முதல் இரண்டு மாதங்கள் ஜென்ம சனியின் காரணமாக உங்களுக்கு நல்ல சூழல் இருக்காது. எனினும் நவம்பர் 2017 முதல் அவை சற்று மாறக் கூடும். எனினும் பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ எதிர் பார்க்க முடியாது. கடினமாக உழைத்தால் மட்டுமே உங்களுக்கு சன்மானம் ஏதேனும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களது மேலாளர் நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும் என்றும் விரைந்து கொடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்றும் எதிர் பார்ப்பார். இது உங்களை சற்று முகனம் சுளிக்க அல்லது வறுத்த பட வைக்கும். எனினும் நீங்கள் கடினமாக உழைப்பதை தவிர வேறு வழி இல்லை. இந்த சூழலை நீங்கள் கடந்துதான் ஆகவேண்டும்.
மேலும் உத்யோகம் மாற்றத்திற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. எனினும் உங்களுக்கு புது வேலை கிடைக்காது என்று இல்லை. எனினும் அதனால் உங்களுக்கு பெரிதாக சம்பளத்தில் அல்லது உங்களது நிதி நிலையில் மாற்றம் ஏற்படாது. நீங்கள் வேலை நிமித்தமாக பயணம் செய்ய்பவராக இருந்தால் அது உங்களுக்கு ஒரு கடினமான காலமாகவே இருக்கும். நீங்கள் உங்களது வாடிக்கையாளரை பார்த்து வேலையை முடிக்க பல முறை பயணிக்க வேண்டியதிருக்கும். இதனால் உங்களது உற்பத்தி குறையும். மேலும் உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் இந்த சூழலை சாதகமாக எடுத்து கொண்டு அவர்கள் வளர பார்ப்பார்கள்.
நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் விசா கிடைப்பதில் பல சிக்கல்கள் எழலாம். அதனால் நீங்கள் உங்களது தாய் நாட்டிற்கு திரும்பவும் நேரலாம். ஜோதிடரிடம் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது உத்தமம். நீங்கள் ஒப்பந்த அடிப்படையில் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் அது நிரந்தரமாக வாய்ப்புகள் குறைவே.
Prev Topic
Next Topic