குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் வேற்று வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

தொழில் மற்றும் வேற்று வருமானம்


கடந்த ஒரு வருடமாக உங்களது தொழிலில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை கண்டுடிருப்பீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி தொழில் செய்வது முக்கியமாகும். இதற்க்கு முக்கிய காரணம், சனி 8ஆம் வீட்டிற்கு செல்வது. இந்த பெயர்ச்சியால் உங்களது தொழிலில் சில தடைகளை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். உங்களது மகா தசை நல்ல நிலையில் இல்லை என்றால் புது தொழில் முயற்சியில் ஈடு படாமல் இருப்பது உத்தமம்.
நீங்கள் உங்களது முக்கியமான மற்றும் நெடுங்காலமாக இருந்த வாடிக்கையாளர்களை சிறு காரணங்களுக்காக இல்லக்க நேரிடலாம். இது உங்களது வருமானத்தையும் பெரிதும் பாதிக்ககூடும். பண வரவும் உங்களது நிதி நிலையும் சற்று குன்றும். உங்களது பண தேவைகளுக்காக வங்கியில் கடன் வாங்கவும் நேரிடலாம். மேலும் அரசின் சில விதி மாற்றங்களால் உங்களது தொழிலில் சில பின்னடைவும் ஏற்படலாம். உங்களிடத்தில் வேலை பார்க்கும் தொழிலார்கள் வேலையை விட்டு நிர்க்கக்கூடும்.
சரியான நேரத்தில் எடுத்த வேலையை முடிக்க முடியாததால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நீங்க பதில் சொல்ல வேண்டிய சூழலும் ஏற்படலாம். இது இத்தனை நாட்களாக நீங்கள் சேர்த்துவைத்த பேரையும் புகழையும் பாதிக்கக் கூடும். உங்களது இந்த சூழ்நிலையை உங்களது போட்டியாளர்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு உங்களது வாடிக்கையாளர்களை அவர்கள் கவர முயல்வார்கள்.


உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் உங்களது மனைவி அல்லது கணவனின் பெயரை சேர்த்து தொழில் செய்வது சில பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிப்பதோடு இல்லாமல் நட்டத்தையும் குறைக்க உதவும். எனினும் புது முயற்சியில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு மற்றும் முதலீட்டை தவிர்ப்பது உத்தமம். உங்களது பத்திரம் மற்றும் இதர சான்றுகள் சரியாக உள்ளதா என்று அவ்வப்போது பார்த்துக் கொள்ளுங்கள்.
சுய தொழில் செய்யோர், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் சற்று கடினமாகவே உழைக்க வேண்டியதிருக்கும். எனினும் உங்களது பேர் கெடாமல் பார்த்துக் கொள்ளவைத்து மிக முக்கியம்.



Prev Topic

Next Topic