குரு பெயர்ச்சி (2017 - 2018) நிதி/பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

நிதி/பணம்


5ஆம் இடத்தில இருந்த குரு கடந்து ஒரு வருடம் உங்களது நிதி மற்றும் வருமானத்தை நல்ல நிலையில் வைத்திருந்திருப்பார். ஆனால் இப்பொழுது குரு 6ஆம் வீட்டிற்கு செல்வதால் உங்களது நிதி நிலையில் அடுத்த ஒரு வருடத்திற்கு சில சிக்கல்களும் பிரச்சனைகளும் வரக்கூடும். நீங்கள் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. ஆடம்பரமான செலவுகளை தள்ளி போடுங்கள். இந்த தேவையற்ற செலவுகள் உங்களை கடன் வாங்க தள்ளலாம் இதனால் நீங்கள் அதிக வட்டியும் கட்ட நேரலாம்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் கடன் வாங்கினால் அதை திருப்பி கட்ட திணறுவீர்கள். மேலும் அது உங்களது கடன் சுமையை அதிகரிக்கும். மேலும் நீங்கள் உங்களது குடும்பத்துக்காகவும், மருத்துவ செலவுகளுக்காகவும் மற்றும் பயணத்திற்காகவும் அதிகம் செலவு செய்ய கூடும்.


மேலும் சனி 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களது வருமானமும் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. இந்த இரண்டு கிரக நிலையு ம் உங்களை பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம். இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அப்படி நீங்கள் கொடுத்தால் அது கண்டிப்பாக திரும்பி வராது. மேலும் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ கடன் வாங்க ஜாமீன் தராதீர்கள். அது உங்களை சிக்கலில் கொண்டு விட்டுவிடும்.
வங்கியில் நீங்கள் கடன் வாங்க விண்ணப்பித்தால் அது நிராகரிக்க படலாம். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் உங்களது சொத்துக்களை அல்லது தங்க நகைகளை விற்க நேரிடலாம்.




Prev Topic

Next Topic