குரு பெயர்ச்சி (2017 - 2018) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

Sep 11, 2017 to Oct 25, 2017 ஆரோக்கியம் மற்றும் பண சிக்கல்கள் (40 / 100)


இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் சனி உங்களது ராசியில் 7ஆம் வீட்டிலும் குரு 3ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் உங்களுக்கு பல உடல நல பிரச்சனைகள் வரக். கூடும். மேலும் உங்களது குடும்பத்தினர்களுடைய உடல் நலமும் பாதிக்கலாம். அதனால் போதுமான மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது.
உங்களது மனைவி / கணவன் உங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். இது உங்களுக்கு மன உளைச்சலையும் வருத்தத்தையும் தரும். மேலும் இந்த காலக்கட்டத்தில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக புதிதாக திருமணம் ஆனவர்கள் தற்காலிகமாக பிரிய கூடும். மேலும் உங்களது மனைவி / கணவன் இல்லத்தார்களுடுன் சில பிரச்சனைகள் வரக் கூடும். எனினும் இந்த பெயர்ச்சி காலத்தில் உங்கள் உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
நீங்கள் யாரையாவது விரும்புகுறீர்கள் என்றால், அவரிடத்தில் அதிக உடைமையுடனும் இருப்பதை தவிர்ப்பது உங்களது உறவு சுமூகமாக செல்ல உதவும். மேலும் நீங்கள் மிக பொறுமையோடும் இருக்க வேண்டும். உங்களுக்கு இடையில் பல பிரச்சனைகள் வரக் கூடும். மேலும் தர்ச்சமயம் புதிதாக வரன் பார்ப்பதற்கும் இது ஏற்ற காலம் இல்லை. புதிதாக யாரையேனும் விரும்புகுறீர்கள் என்றால் சற்று பொருமையோடு இருப்பது நல்லது.


உங்களது வேலை சுமை அதிகரிக்கலாம். மேலும் நீங்கள் குறைந்த மதிப்புள்ள ப்ரஜெக்ட்டுகளில் வேலை பார்க்க நிர்பந்திக்க படுவீர்கள். இல்லை என்றால் நீங்கள் உங்களது ப்ரஜெக்ட்டை வேறொருவருக்கு முக்கியமாக அந்த ப்ரஜெக்ட்டை பற்றி எதுவும் தெரியாதவர்க்கு கொடுக்க வேண்டிய சூழல் அலுவலகத்தில் உங்களுக்கு எழலாம். மேலும் புது முதலாளி அல்லது முது மேலாளர் வருகை அலுவலகத்தில் மேலும் உங்களது நிலையை மோசமாக்கும். நீங்கள் உங்களது வேலையையும் சொந்த வாழ்க்கையையும் சமமாக பார்த்துக் கொள்ள முடியாமல் திணறுவீர்கள்.
தொழிலதிபர்களுக்கு உங்களது மகா தசை சாதகமாக இருக்க வேண்டும். மேலும் உங்களது ஜென்ம ஜாதகமும் உங்களுக்கு ஆதரவாக இருந்தால் இந்த பெயர்ச்சி காலத்த்தில் உங்களுக்கு நல்ல சூழல் அமையும். இல்லையென்றால் நீங்கள் தேவையற்ற ஏமாற்றங்களையம் தோல்விகளையும் சந்திக்க நேரலாம். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தராமல் போகலாம். மேலும் அது தவறாகவும் ஆகலாம். அது உங்களது சேல்வாக்கையும் கெடுக்க கூடும்.
இந்த முதாலம் பாகம் பெயர்ச்சி காலத்தில் நீங்கள் தொழிலை விரிவு படுத்த எந்த ஒரு புது முயற்சியும் எடுக்க வேண்டாம். மேலும் அதிக லாபம் எடுப்பதற்காக நீங்கள் செலவு அதிகப் படுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்களது ரிஸ்க்கை குறைத்து கொள்வது நல்லது. மேலும் நீங்கள் உங்களது குடும்பத்தினர் எவரையாவது உங்களது தொழிலில் சேர்த்துக் கொள்வது சாதகமாக இருக்கும்.


வழக்கு சம்பந்தமான விசயங்களில் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் தேவையற்ற பயணங்களை இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தவிர்ப்பது நல்லது. உங்களது செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் உங்களது வருமானம் எந்த ஒரு ஏற்றமும் இரக்கமும் சீராக இருக்கும். உங்களது கடன்கள் அதிகரிக்க கூடும். இது உங்களது கடன் மதிப்பை பாதிக்கலாம். உங்களுக்கு வரும் அடுத்த சில மாதங்களுக்கு பணத் தேவை இருக்கும் எனில், அதற்கான சேமிப்பை இப்பொழுது இருந்தே ஆரம்பிப்பது நல்லது. மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலம் இல்லை. எனினும் நட்டத்தை தவிர்ப்பதற்கு நீங்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது உத்தமம்.

Prev Topic

Next Topic