![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | காதல் |
காதல்
5ஆம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு பகவான் உங்களது கணவன் மனைவி உறவை மகிழ்ச்சியோடு வைத்திருந்திருப்பார். திருமணம் ஆகாதவர்கள் உங்களது துனையை சந்தித்திருந்திருப்பீர்கள். ஆனால் இப்பொழுது, குரு 6ஆம் வீட்டிற்கு செல்வதால் புது நட்ப்பை அறிமுகப் படுத்தக்கூடம். இந்த புது வரவால் கணவன் மனைவிக்கு மத்தியில் சில தவறான கருத்து வேறுபாடுகள் உருவாகக்கூடும். இதனால் குடும்பத்ததில் பிரச்சனைகளும் உருவாகலாம். எனினும் நீங்கள் மிக பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். எந்த சூழலையும் சாமர்த்தியமாக யோசித்து செய்ய வேண்டும்.
உங்கள் இருவருக்கு மத்தியிலும் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை மற்றவர்களிடம் பகிர்வதை விட நீங்கள் இருவரும் பேசி சரி செய்து கொள்வது உத்தமம். உறவினர்களாகட்டும் அல்லது நண்பர்களாகட்டும், கணவன் மனைவிக்கிடையே நடக்கும் பிரச்சனைகளை அடுத்தவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. அவ்வாறு செய்தால் அவர்கள் அதை பெரிது படுத்தி உங்களுக்கு இடையே இருக்கும் விரிசலை அதிக படுத்த கூடும். அதை காட்டிலும் பொறுமை காத்து அமைதியாக செல்வது காலப்போக்கில் பிரச்னையை சரி செய்துவிடும்.
திருமணம் ஆகாதவர்கள் காதல் வயப்பட்டிருந்தால் அதை உங்களது பெற்றோர்களிடம் கூறி ஒப்புதல் பெறுவதற்கு இது கடினமான காலமாகும். சில விசயங்கள் உங்களது கட்டுப்பாட்டை மீறி நடக்க கூடும். இது உங்களது பெற்றோர்களிடம் உள்ள உறவை பாதிக்கக் கூடும். மேலும் திருமணம் ஆகாதவர்கள் சிறிது காலம் காத்திருப்பது நல்லது. நீங்கள் உங்களது மனைவி அல்லது கணவனோடு அவ்வபோது வாக்குவாததிலும் சண்டையிலும் ஈடுபட கூடும். உங்களது உடல் நலம் மேலும் உங்களது உறவுகளை பாதிக்கும். மேலும் குழந்தை பெற நினைத்தால் சற்று தள்ளிப் போடுவது நல்லது. கர்ப்பிணி பெண்கள், முக்கியமாக அயல் நாட்டில் வசிப்பவர்கள் போதுமான ஆட்கள் துணையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic