![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்படம், காலை, அரசியல்
திரைத் துறையில் இருப்பவர்கள் கடந்த ஒரு வருடம் பெரிய அளவில் வெற்றி அடைந்திருப்பீர்கள். அனால் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் சற்று கவனமாக செயல் பட வேண்டியதுள்ளது . புது வாய்ப்புகள் வரும் போது நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும். பல காரணங்களால் உங்களது படம் எதிர் பார்த்த வெற்றியை பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக நிதி பற்றாக்குறையால் அது தாமதமாகவும் வாய்ப்பு உள்ளது. மேலும் மறைமுக போட்டியாளர்களும் எதிரிகளும் உங்களுக்கு தோன்றி உங்களது வாய்ப்புகளை தட்டி விடுவார்கள். இதனால் உங்களது ஒப்பாந்ங்கள் ரத்தாக வாய்ப்பு உள்ளது. யார் உங்களுக்கு பின் இருந்து இப்படி செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது கடினமே.
நீங்கள் ஒரு பிரபலமான திரை நட்சத்திரமாக இருந்தால், உங்களது பேரையும் புகழையும் காப்பாற்றி கொள்ள நீங்கள் அதிகம் போராட வேண்டி இருக்கும். புது வாய்ப்பை தேடுவதை விட இருக்கும் மதிப்பையும் பேரையும் காப்பாற்றி கொள்ளவது முக்கியம். மேலும் நீங்கள் சில சங்கடங்களையும் சந்திக்க நேரலாம். அரசியல்வாதிகள் மறைமுக எதிரிகளால் பல தோல்விகளை சந்திக்க நேரிடலாம். அதனால் அதிக கவனம் தேவை.
Prev Topic
Next Topic