குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


உங்களது ராசிக்கு குரு வரும் செப்டம்பர் 11, 2017 அன்று 5ஆம் வீட்டில் இருந்து 6ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாக உள்ளார். கடந்த ஒரு வருடமாக குரு பகவான் உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்ததால் நீங்கள் உங்களது வாழ்க்கையில் பல நன்மைகளை அடைந்திருப்பீர்கள். மேலும் உங்களது தொழிலில் அல்லது உத்யோகத்தில் நீங்கள் ஒரு படி உயர்ந்திருப்பீர்கள். சிலருக்கு திருமணம் ஆகி இருந்திருக்கும், குழந்தை பேரு பெற்றுருப்பீர்கள் மேலும் பல நன்மைகளை அடைந்திருப்பீர்கள். தொழிலில் உங்களது முதலீடும் வெற்றிகரமாகவே இருந்திருக்கும்.
எனினும் தற்போது இந்த பெயர்ச்சி காலத்தில் குரு பகவான் உங்களது ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் வரும் செப்டம்பர் 11, 2017 அன்று சஞ்சரிப்பதால்,இது நாள் வரை அவர் உங்களுக்கு தந்த நன்மைகள் சற்று குறைய தொடங்கும். மேலும் சனி 8ஆம் வீட்டில் சஞ்சரித்து, அவர் அஸ்தம ஸ்தானத்தில் இருப்பார். ராகு 3ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். சில நன்மைகளையும் ராகு உங்களுக்கு தருவார்.



ராகு உங்களுக்கு சாதகமான நிலையில் இருந்தாலும் குருவின் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு சோதனை நிறைந்த காலமாகவே இருக்கப் போகிறது. இதனால் எதிர்மறை சக்தி அதிகரித்து நீங்கள் உங்களது வாழ்க்கையில் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். உங்களது உடல் ஆரோக்கியத்திலும், நிதி நிலையிலும் சில பிரச்சனைகள் வரக் கூடும். உங்களது குடும்பத்திலும் அலுவலகத்திலும் சில பிரச்சனைகளை நீங்கள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் மருத்துவ காப்பீடு, வீடு காப்பீடு மற்றும் வாகன காப்பீடு எடுத்துக்கொள்வது ஓரளவு செலவுகளை குறைக்க உதவும். பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட்டு நேர்மறை சக்திகள் அதிகம் பெற நீங்கள் சிவனை வணங்குவது உத்தமம். .




Prev Topic

Next Topic