![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வேலை/ உத்யோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | வேலை/ உத்யோகம் |
வேலை/ உத்யோகம்
நீங்கள் உங்களது உத்யோகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல வளர்ச்சியை கண்டிருப்பீர்கள். ஊதிய உயர்வு, பதவி உயர்வு மேலும் புது வேலை போன்றவை உங்களை மகிழ்வித்திருக்க கூடும். ஆனால் இப்பொழுது வரவிருக்கும் குரு பெயர்ச்சி அடுத்த ஒரு வருடத்திற்கு உங்கள் வேலை உதோயகம் பொறுத்தவரையில் ஒரு சோதனை மிகுந்த காலமாக இருக்கும். நீங்கள் பெரிய சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியதிருக்கும். உங்களது அலுவலகத்தில் தேவை அற்ற மாற்றங்கள் நிகழும். புது மேலாளர், புது ப்ராஜெக்ட், புது சக ஊழியர்கள் போன்று பல மாற்றங்களை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். மேலும் இதனால் உங்களுக்கு மறைமுக எதிரிகளும் தோன்றலாம்.
நீங்கள் இரவும் பகலும் 24/7 கடினமாக உழைத்து வேலை பார்த்தாலும் தக்க நேரத்திற்குள் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். மேலும் உங்களது சில குறைபாடுகளையும் உடன் இருப்பவர்கள் சுட்டிக் காட்டுவார்கள். உங்களுக்கு சேர வேண்டிய புகழும் சன்மானமும் பிறருக்கு போய் சேரலாம். உங்களது மேலாளர் அல்லது முதலாளி உங்கள் வேலையில் திருப்தி அடைய மாட்டார். உங்களை அனைவரும் வேலை இடத்தில உன்னிப்பாக கவனிப்பார்கள். மேலும் சில அவமானங்களுக்கும் நீங்கள் ஆளாக நேரிடலாம். ஒரு சமமான சூழலை உங்களது அலுவலகத்தில் காண்பது மிக கடினம். மேலும் நீங்கள் அவசரப் பட்டு ஏதேனும் முடிவெடுத்தால் அது பெரிய விளைவுகளில் சென்று முடியும். நீங்கள் உங்களது குடும்பத்தினரோடு பொறுமையோடும் அமைதியாகவும் இருக்க வேண்டும். உங்களது அலுவலகத்தில் உங்களுக்கு மெமோ கொடுக்கும் சூழலும் உருவாகக் கூடும். அதனால் வேலையில் தவறு இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.
Prev Topic
Next Topic