![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் வேற்று வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | தொழில் மற்றும் வேற்று வருமானம் |
தொழில் மற்றும் வேற்று வருமானம்
கடந்த ஒரு வருடமாக தொழிலதிபர்கள் ஒரு கலவையான பலன்களையே பெற்றுருப்பீர்கள் . நீங்கள் உங்களது தொழிலில் அதிக உழைப்பும் கவனமும் செலுத்தி வந்திருந்தாலும் எதிர் பார்த்த பலன்களும் வருமானமும் வந்திருக்காது. நல்ல பேரையும் புகழையும் சம்பாதித்திருந்துருப்பீர்கள், எனினும் வருமானம் குறைவாகவே இருந்திருக்கும். தற்போது குரு பெயர்ச்சி காலகட்டத்தில் குரு மற்றும் ராகு பகவானும் சேர்ந்து நீங்கள் எதிர் பார்த்ததை விட அதிக பலன்களை தர உள்ளார்கள். நீங்கள் பண மலையில் நனைய போகுறீர்கள் என்றால் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை.
உங்களது அதிர வளர்ச்சியை கண்டு புது முதலீட்டாளர்கள் ஆச்சரியப் படுவார்கள்.மேலும் அவர்கள் உங்களிடம் அதிக முதலீடும் செய்வார்கள். இது உங்களுக்கு பண வரத்தை அதிகரிப்பதோடு வேகமான வளர்ச்சியையும் உங்களது தொழிலில் தரும். மேலும் போதுமான அளவு பண வரத்து இருப்பதால் உங்களது நிதி பற்றாக்குறையும் நீங்கி நீங்கள் நல்ல லாபகரமான சூழலை காண்பீர்கள். உங்களது தொழிலை விரிவாக்க இது ஏற்ற காலமாகும். மேலும் நீங்கள் ஒரு புது கம்பெனி தொடங்கி உள்ளீர்கள் என்றால் அதை வெற்றிகரமாக எடுத்து செல்ல இது ஏற்ற காலமாகும். நீங்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு எதிர் பார்த்ததை விட அதிக லாபத்தை காண்பீர்கள். எனினும் அர்த்தாஷ்டம சனி பெயர்ச்சியால் நீங்கள் புதிதாக தொழில் தொடங்க இது ஏற்ற காலம் இல்லை.
சுய தொழில் புரிவோர், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளுக்கு இது நல்ல வளர்ச்சி தரக்கூடிய காலமாகும். மொத்தத்தில் உங்களது நிதி நிலையம் வளர்ச்சியும் உங்களை மகிழ்ச்சியடைய வைப்பதோடு இல்லாமல் புகழையும் பெற்று தரும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபகரமாகவே இருக்கும்.
Prev Topic
Next Topic