குரு பெயர்ச்சி (2017 - 2018) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

கல்வி


மாணவர்கள் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வந்திருப்பார்கள். கடந்த ஒரு வருடம் உங்களுக்கு பல சோதனைகளை தந்திருக்கும். சனி நல்ல நிலையில் இருந்திருந்தாலும், நீங்கள் சில உடல் நல பிரச்சனைகளால் அவதி பட்டு வந்திருப்பீர்கள். மேலும் உங்களது நெருங்கிய நண்பர்களுடனும் சில புரிதலின்மை காரணாமாக விலகி இருந்திருக்க கூடும். எனினும் இப்பொழுது நிகழவிருக்கும் குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் உங்களது நண்பர்களோடு இணைத்து நட்போடு இருப்பீர்கள். இது உங்களுக்கு மன அமைதியை தரும். உங்களது தன்னம்பிக்கை உயரும். உடல் உபாதைகளில் இருந்து விடு படுவீர்கள்.
மேலும் உங்களது திறமைகளை நீங்கள் வெளி படுத்த இது தக்க காலமாகும். நீங்கள் பொது தேர்வு எழுத உள்ளீர்கள் என்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் நல்ல மதிப்பென்கள் பெற வாய்ப்புள்ளது. அது மட்டும் இல்லாது, நீங்கள் விரும்பிய படியே உங்களுக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கையும்


கிடைக்கும். உங்களது நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் முதுநிலை மற்றும் Ph.D மாணவராக இருந்தால் உங்களது ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று நீங்கள் பட்டம் பெறுவீர்கள்.


Prev Topic

Next Topic